Posts

Showing posts from July, 2018

காத்திருந்த காலை.

காலைகளாம் பயணத்தில் காத்திருக்கும் சக மனிதர்தம் கவலைகளெல்லாம் சாய்ந்திருக்க ஓரிருக்கை. எப்ப வருமோ பேருந்தென்பதோர் கவலையென்றாலும், உட்கார இடம் கிடைக்குமா என்பது இன்னோர் கவலை. மானுட கவலைகள் ஏராளம். சாதாரணர் கவலையெல்லாம் கால்வலிக்காத பயணங்கள். நடத்தலே வாழ்க்கை, நடப்பதே வாழ்க்கை. நடையாயே வாழ்க்கை. நடை பிணங்களென நாம் சொல்லும் நடைமுறை வார்த்தை வழக்காறு நெஞ்சைக் கொல்கின்றது. அவர்கள் மனிதரே! சாதாரண தேவைகளன்றி பேராசைகள் முயலாத பெருங்கூட்டமொன்று இன்னமும் சாலைகளில் பின்னங்கால் தவமிருக்கக்கண்டால், ஒரு புன்னகையால் குட் மார்னிங் சொல்வோமே! இந்த தேசம் அவர்களாலேயே இயங்குகின்றது. A  Gladys Stephen  co-passenger concerned morning!.

நலம் வாழ ஞாயிறின் வாழ்த்துகள்

🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅 ஒவ்வொரு ஞாயிறிலும் தீர்மானங்கள். சனி வரை சாதிக்க இயலாதவைகளுக்கான தீர்மானங்கள். வாழலின் ஆசைகளற்றவர் யாருமில்லையே? நமக்கே நமக்கானவைகளின் ஆசைக...

குட்டித் தூக்கம், குதூகலம்

சில பகல்களுக்கு சவுண்ட் சிலீப் நல்லது. மனதின் ஓசைகளை மியூட் ஆக்கும் குட்டித்தூக்கத்தில் எப்படி ஆழ்ந்துறக்கம் என்று வரிந்து கட்டும் நக்கீர நட்பே... குட்டித் தூக்க...

காலையாம் ஆறுதல்

காலையென்பது ஆறுதலே . காயங்களின் கட்டு. நேற்றின் மரணங்களிலிருந்தே இன்றின் பிறப்பு. அகழ்வாராய நம் மனமொன்றும் சிந்து சமவெளியன்று. வலிகளின் மீதே நம் ஷாஜஹால்கள்! ஆயினு...

காலைத்தென்றல்

Image
தென்றலும் காலையும் இணைபிரியாதவை. தேகம் தொடும் காற்றின் ஸ்பரிஸம் இதமாயெழுப்பும் விடியலில் புயலாய் கனன்ற கணங்கள் அகன்று செல்லும். வல்லினங்களற்ற மெல்லினமாயே ஒவ்வொரு காலையும். ஜீவனின் மூச்சில் மெல்லினங்களை உச்சரிப்போம். அன்புச்சொற்களில் ஆனந்தம் செய்வோம். நாமெலாம் இடையினம். அன்பாம் வேதத்தில் நல்லினமாவோம். மென்காற்றே வா! இந்நாளில் வா! A Gladys Stephen gentle wind!

ஆவாரம் பூவு🍃

Image
பூக்களில் நீ ஆரவாரம். அகழ்ந்தேன் இம்மாலையில் உன் அவதாரம். பணி முடித்துத்திரும்புகையில் பிரமிப்பு. ஒரு மகா தேசத்தின் இருப்பை உறுதி செய்யும் சாமான்யர்களைப்போன்றே ஆவாரம் பூவும்! சாமான்யர்களின் ஓட்டமும் நடையுமான வாழ்வில் எத்தனை சந்திப்புகள் குதூகலங்கள். தாமரை தேசிய மலர்தான். ரோஜா, ராஜாக்களின், ராணிகளின் மஞ்சத்தில்தான். மல்லிகைகள் மயக்கத்தான். பிச்சிகளும், முல்லைகளும் மகிழ்விக்கத்தான். ஆவாரம்பூவை ஆழ்ந்து பாருங்கள், சாமான்யச்சேதிகள் நிறைய உண்டு! இந்த மாலை போல். மனதிதமான சேதி போல். சாமான்ய வாழ்வின் சந்தோஷங்களை காண முடிந்ததை விட வேறென்ன சந்தோஷம்? நாம் போகும் பாதைகளில் காத்திருக்குது. ஆவாரம் பூவு! A  Gladys Stephen  awesome ஆவாரப்பாடல்! Happy evening!

நற் காலை

Image
எல்லா காலைகளும் நல்ல காலைப்பொழுதுகளே. நேற்றின் விட்டதுகளைத்தொடரவும் நேற்றின் தொடாதவைகளைத் துவக்கவும், தருணம் வாய்ப்பு & சந்தர்ப்பம். சொல்ல மறந்த வார்த்தைகள், செய்யத் தவறிய செயல்கள் & அவசரப்பட்டு செய்தவைகள் எல்லாவற்றையும் மீள் பார்வை செய்து மீண்டு பிறக்க ஒரு தக்க தருணம். வாழ்வென்பதே வாய்ப்பு தான். எத்தனை பேருக்கு கிடைத்தது இவ்வாய்ப்பு? எனக்கும், உங்களுக்கும் கிடைத்திருக்கின்றது. நல் வாய்ப்பு, நற்காலை. புதிதாய் பயணிக்கின்றோம் என்பதே பெரும்பெருமை. கொண்டாடலாமே... இது நற்காலை. A  Gladys Stephen  Good Morning!

Mission Accomplished

Image
May be knitting of a scarf. Or a jacket for bullet proof. May be rowing a boat  ⛵ Or a stitching a by pass heart  💓 May be painting a damsel  💃 Or writing of a Josephine appraisal. May be making a cup of tea  🍵 Or a juisy cake or pie  🍰 May be cooking a malligai idli. Or a coconut chutney 😍 May be correcting pharmacy papers. Or getting a seat in Erode copters. Mission accomplished is a great feeling! Like the dusk of this beautiful earth! A mission accomplished  Gladys Stephen  evening wishes 👩‍🎨 👩‍🔬

தெளிவு

காலைகள் தெளிவானவை. தெளிவதற்காகவே காலை. இரவற்ற பகல்களாகவே இருந்து விட்டால் தான் தெரியும், இருளின் அருமை. விடியாமலேயே போய்விட்டாலோ, இருளே கொடுமை. இந்த விடியல் தெளிவா...

வானுயர்ந்த சோலை

நினைவுகள் சோலை. உணர்வுகள் பூக்கள். ஒவ்வோர் காலையும் நம்மை உயிர்ப்பிக்கும் நினைவுகளாலேயே துவக்கப்படுகின்றோம். சில நினைவுகள் நம்மை வாழத்தூண்டுகின்றன. சில ஞாபகங்...

திருச்சூரில் திருமணம்

இன்று அகிலுக்கு திருமணம். என் குடும்பத்தில் ஒருத்தி, அவள் குடும்பத்தில் என்னை இருத்தி. உடனிருந்தவர்தாம் உறவுகளா? ஆத்மாவின் ஒத்திசைவால் ஒட்டிப்பிறந்த இரட்டையரு...

காலையாம் போதி மரம்

Image
ஒவ்வொரு காலையும் போதிக்கும் போதி மரம். நம்பினாலே ஞானம். நானும் நம்புகின்றேன். வானம் மிகச்சிறந்த தபோபனம். நீல விரிப்பாம் நினைவோடைகளில் நீந்துகின்ற விண்மீன்கள் தொடுத்து, சந்திரமுகத்தாளை டாலர் அணிவித்து, இயற்கையாம் எழில் பூண்டு, அழகோவியத்தவம் செய்யும், அற்புத நாள் காலை. அதெப்படி பகலில் நிலவும், விண்மீன்களும்? நினைவோடைகளுக்கு ஏதம்மா பகலிரவு? எப்பொழுதும், முப்பொழுதும் நீங்கா நினைவுகள் கோர்த்து செய்யும் தவமாலைக்காலைகளில் வரம் வாங்குவேன் வாழ! வாழ்வென்பது "என்ன வாழ்க்கை வாழ்கின்றேன்!" என்ற சலிப்பன்று. "இன்னும் வாழ்வேன்", என்ற சல்லடைத்தீர்மானம். உறுதி கொள்வேன் இறுதிவரை! வாழலாம் போரில், நானே மங்கம்மா, நானே ஜான்சி கி ராணி. தோல்விகள் ஏதுமில்லை. "தோற்றுவிடுவேனோ  நான்?", என எண்ணாத வரை. எழுக! இன்று நமது நாள். இனிய காலை அதை உணர்த்தும்! A Gladys Stephen war challenge  in the morning!

கோவில் மணி.

Image
மனிதம் ஆராதிக்கப்பட வேண்டிய மதம். ஒவ்வோர் உயிரும் தெய்வத்துவம். உணர்வுகள் போற்றுதற்குரியதாயிராவிட்டாலும் சிந்தனைக்குரியது. ஒவ்வோர் வாழ்வும் ஒவ்வோர் தவம். அட்சயப்பாத்திரம். அள்ள, அள்ள குறையாத காயசண்டிகைக்கலம். எதிர்பார்ப்பு, ஏக்கம், நிராசைகள் என ஏராள, ஏராளங்கள். ஒரு இரட்சக வருகைக்கான எதிர்பார்ப்புகளாய் ஏராள யுகங்கள். வாராத வாய்ப்புகளுக்கான ஓட்டங்களாகவே மானுட நகர்வுகள். ஆனாலும்... நிராசையிரவுகளின் நீட்சியாயிராமல், நல்லவை நடக்கும் என்ற நம்பிக்கையாகவே ஒவ்வோர் பகலும் மானுடத்தின் முகத்தில் விடிகின்றது. அம்மானுட மகத்துவர்களின் காலையின் சங்கீதமாய், நம் அன்பின் செயல்கள் நிலவட்டும். இந்நேய ஆராதனைக்கு என் காலை வாழ்த்து கோவில் மணியெனிற் அதைக்கொண்டாடுங்கள்! மானுடம் வாழ்க! A  Gladys Stephen  humanitarian morning bell!

மல்லிகை.

Image
புதுச்சேலை, புத்தம் புதுப்பூக்கள், புது மகிழ்ச்சி! வாசம் முன்பேயுள்ளது, அதன் அனுபவம் புதிதாயின், அது தரும் மகிழ்ச்சி புதிதாயின், புதுவாசமே. சூடும் மல்லிகையின் வாசமா என்னமோ தெரியாது, புதுச்சேலை ஸ்பரிஸமோ தெரியாது. இந்தக்குதூகலம் பெண்பால் குதூகலம். இந்த மகிழ்ச்சி பெண்மனதின் மகுடம். மென்மையான வன்மையாளுக்குள்ளும் நந்தவன ஞாபகங்கள். சில அழகியல்கள் வாழல் சம்பந்தப்பட்டது. பெண்ணாள் வாழ்வியலின் அழகியல்களையும் நளினங்களையும் போற்றாத மானுடம், ஆணாதிக்க அரக்கத்தின் உக்கிரமே. பெண்ணைப்போற்றுங்கள். மல்லிகை அவள்! A  Gladys Stephen  Jasmine song !

கடிகார நேசம்.

Image
விடிந்ததெனத் தெரிந்து, துவக்கி இந்த கடிகார நேசமும் துவங்குகின்றது. சலிப்புக்கு ஆயிரம் காரணமிருப்பினும், சளைக்காமல் கடிகார நேசம். ஓட்டமும் , நடையுமாவோ, ஆற, அமரவோ, எதுவாயினும் கடிகாரம் சார்ந்தே காரிய சித்தி. நேரம் மேய்த்தல் ஒரு பெருந்தவம்! அதை மேலாண்மை என்று மெருகூட்டினாலும், காலத்தோடு ஓட்டம் பெருந்தவமே. காலையில் துவக்கி, காலை காலையாய் தொடரும் இந்த காலப்பெருந்தவத்தில் காலமாகவே காலகாலமெலாம் கடிகார நேசம். வாழ்வெனும் கணக்கில் காலமும், கடிகாரமும் இணைபிரியாதவை. "டைமாச்சு எழுந்திரி " , என்பதே அதிகம் பாடப்படும் தவஸுப்ரபாதம். "எழுந்திருங்க நட்புகளே வேலைக்கு நேரமாச்சு!". கடிகார நேசத்துடன் ... காலை வணக்கம்! A  Gladys Stephen  Good Morning tick...tick...tick...! 😂

ஞாயிறு.

Image
ஒரு இயற்கை நியதியை மிக சாமர்த்தியமாக மத அடையாளமாக்கி விட்ட பொது மனம் அபார வலிமை கொண்டது. தங்கள் உச்ச சிந்தனைகளின் வெளிப்பாட்டை வாரந்தோறும் மூளைகளுக்குள் திணித்து விசுவாசமென்ற பெயரால் மரபு சார் நம்பிக்கை வளர்க்கும் கொல்லன் உலைக்கூடம்தான் வழிபாட்டு ஞாயிறுகளென்றால் இயல்பாய் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்பதும், அன்னமிடுவதும், காயங்கட்டி களிம்பு தடவி கரிசனம் காட்டுவதும் என்ன? சாலை விதி மறந்து, நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தி, பீஃப் பற்றிய ஞாபகங்களுடன் நடக்கும் பிராத்தனைகளும், திருவிருந்துக்காரர்களின் ஆடைப்பின்புறங்களின் ஆலோசனைகளும்தான் தியான நேரமென்றால்... எனக்கு அந்த காலை நேர ஏழைத்தாயின் " அம்மா பசிக்குதும்மா ... " பெரும்பூஜையொலி. நானே கடவுள், என் பத்து ரூபாய் கருணையே அருள். போதும். உங்கள் ஞாயிறின் வியாக்கியானங்களை நீங்களே நம்பாதபோது. என் மானுடம் மீதைய என் நம்பிக்கை என் ஞாயிறுகளைக்காக்கும் . திங்கள்களை சனி வரை தரும்.  ஆமேன்! A  Gladys Stephen  Sunday sermon on the roads of Bhavani.

எதுவுமில்லையோ...

Image
சில வேளைகளில் எல்லாமே காலியானது போன்ற உணர்வு. அறிவு, அன்பு அனைத்தும். நிறைய போய்விட்டதோ என்ற சந்தேகம். வெறுமையான ஓர் சூன்யத்தில் நிற்பது போன்ற ஒரு தோற்றம். மாயம். நிஜத்தில் எல்லாமிருந்தும் ஒன்றுமில்லாதது போன்ற ஓர் உணர்ச்சி. குட்டி நாயாட்டம் மனசு மழையில் நனைகின்றது. நானே மழையாய், நாய்க்குட்டியாய் மார்போடணைக்கும் தாயாய். வெறுமைக்குள்ளும் காட்டாற்று மழை. அறிவிப்பற்ற சூறாவளிகள், ஆழம் பார்க்கும் சுனாமிகள். இந்த வெறுமை தவமும் ஒருவிதத்தில் நல்லதுதான். இல்லையேல் பீரிட்டெழும்பும் எரிமலைக்குழம்பாய் உருகியோடி எரிந்திருப்பேன். எரித்திருப்பேன். மாலை நேர மயக்கமாய் ஞாபகங்களை கைப்பைக்குள் திணித்துக்கொள்கின்றேன். மேஜை மீது வைத்துவிட்டு ஒரு கோப்பை குழம்பியோடு குதூகலித்து விட்டு திரும்பி வந்தால்... கைப்பை ஞாபகங்கள் காணமற் போயிருக்கும். இருக்கட்டும், நாளைகளில் திரும்பவும் தோளில் சுமந்து கொள்ளலாம். வெறுமையென்பது முற்றிலும் காலியான உணர்வன்று. நிரம்பி வழிபவைகளின் மௌனம். மௌனங்கள் பேசுவதில்லை என்று எந்த மஹானும் போதிக்கவியலாது. வெறுமையென்பது வெறுங்கையன்ற...

கருத்தாய்

Image
ஒவ்வொரு காலையும் காத்திடுவாய். கருத்தாய். நினைவுகள் மெல்ல எழும்பி, நிதமும் உன்னை நினைத்திடுவாய். தொடர்ச்சிகளின் நினைவே நாம். நீள் நினைவுகளின் உருவாக்கமே நாம். கடமைகள், கழன்றவை, கனன்றவை என வாழ்நாள் நினைவுகளின் வடிவாக்கமே நாமென்ற நடமாட்டம். சுமந்து செல்லும் உணர்வுகளின் வெளியாக்கமே நம் ஆளுமை. முகம் பார்த்து புகழும் மாந்தர் நடுவில் உளம் என்றே ஆகி விடு உளமே ! கருத்தாய் காலம் காட்டு. புகழாரப்பாசுரம் பாடி இகழாரம் நினைக்கும் மாந்தர் நடுவில் நினைவார நேர்மையாய் கருத்தாய் உலவிடு. கருத்தாய் வலம் வரும் உன் காலைகளின் விண்ணப்பரெல்லாம், கண்ணார கண்ணாயிரங்களென கற்றறிந்தவள் நீயென கற்றறியாதார் கண்கள் பூத்துப்போய் புறையேறும் . கருத்தாய் காலையாகு. மெல்லப்படரும் சூரியச்சினம் நீயென அறியாதோர் வார்த்தைகளெலாம் காலைப்பனிப்போலே. அதன் ஈரப்பாதைகளே நம் வாழ்வெனும் சாலை. வானமென்பது உள்ளேயும்தான். விடியலென்பதும் உள்ளேயேதான். கருத்தாய் காத்திடும் காலைகளில் நீ இருந்தாயென்பதே நீ எழுதும் வரலாறு. Decide your morning! Decide your destiny! Happy Saturday morning! A  Gladys Stephen ...

ஓட்டம்

Image
நிற்காத ஓட்டம். கைப்பற்ற ஓட்டம். காலை துவக்கிய ஓட்டம். எனக்காய் நான் ஓடும் ஓட்டம். நிலையான ஓட்டம். நீங்காத ஓட்டம். யாருக்கும் காத்திராத ஓட்டம். வழித்துணைகள் தேடாத ஓட்டம். ஒரு நோக்கத்திற்கான ஓட்டம். யாரையும் நோக்காத ஓட்டம். யாரையும் நோகடிக்காத ஓட்டம். எனக்கான ஓட்டம். நின்று பார்க்க நேரமற்ற ஓட்டம். கண்காட்சிகள் அழகுதான். ராபர்ட் ஃப்ராஸ்ட் (Robert Frost) கவிதை போல. ஆனாலும்... நீண்ட தொடுவானம் போல தொடா வானங்களைத்தொட மண்ணில் ஓடுகின்றேன். அனுதாபங்கள் தேவைப்படாத விலங்கு நான் . என்னை நீங்கள் ஒரு துயர விலங்காக எண்ணியிருக்க அனுமதிக்க மாட்டேன். ஆதரவு தேவைப்படாத பேரோலம், பேரிரைச்சல் என் வாழ்க்கைப்பாதை. அதை இசையாக்கவும், இன்னிசையாக்கவும் என் தந்திகள் மீது நான் ஓடியோடி நடத்தும் ராக ஆலாபனைகளே என் பொழுதாம் மேடை. நானே ஒப்பனை, கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு. என் வார்த்தைகளின் ஜனனத்தில், என் வாழ்வு ஜன்னல்கள். காற்று வந்து போகும் சாளரங்களிலும், என் பாட்டின் சுதி மாறாது. சுருதி பேதம் காணாத மனுஷ்ய ஓட்டம் என் வீடடையும் ஆட்டம்! இந்த ஓட்டம் முடிகையில் ந...

கரை வந்த காவேரி.

Image
கரம் நெகிழவிட்டு பவானி சூழ்ந்த காவேரியில் மனம் நெகிழ்கின்றது. இறுகிய மனங்களை குளிர்விப்பதே இயற்கை. கன அடி கணக்குகள் தாண்டி வந்து வீழும் காவேரியால் வயலும்-வாழ்வும் நனைகின்றது. கண்ணீரும் நனைகின்றது. சுற்றிச்சூழ்ந்திருக்கும் பாசிகளையும் பிவிசியையும் தழுவிச்செல்லும் நெகிழியகற்றம் நெஞ்சைத்தொடுகின்றது. மனசு இந்த மாலையில் உன்னால் ரம்மியமாகின்றது. காவேரிக்காற்றே வருடம் முழுவதும் வா! A  Gladys Stephen  Cauveri welcome.

என்னை கொஞ்சம் மாற்றி...

Image
மாற்றம் மாறுவதில்லை. நேற்றின் மாற்றமே இன்று. இன்று மாறினால் நாளை. காலமென்பதே மாற்றத்தின் மாறா தோற்றம்தான். ஒன்றின் ஆதாரத்திலேயே இன்றொன்று. என்னை மாற்றுதலில் என் நேற்றின் மாற்றங்கள் நாளைக்குமான மாறுதல்களாய், மாறிலிகளாய். மாறாதது சூரியனுமில்லை ஒரே போல வானும் சூரியனும் வாழ்ந்ததில்லை. ஆனாலும் மாறிலி மாற்றங்களாயே மாற்றங்களின் மாற்றம். ஏமாற்றம் என்பது மாற்றங்களின் அதிர்ச்சி எனிற், மாறும் என்பதை மாறாது என்று எதிர்பார்த்திருந்தால் ஏதிந்த ஏமாற்றம்!? ஆறாம் வாழ்வில் ஏழரை சனியெலாம் எழுதியவன் பாட்டு, அதை மாற்று. ஏ நீ அதை மாற்று. ஏமாற்று! மானுட நகர்வில் பகுத்தறியா பாதைகளை புகுத்தறியாதறே மாறாததாயிருக்கட்டும். Life is simple. Don't make it complicated. Because there are some people who confuse things, if they can't convince you! Have a clear morning! Convincing morning! A  Gladys Stephen  affirmation!

பவானி.

Image
பெயரிலேயே ஓர் இதம். காவிரி நெகிழவிட்டு ஈரோட்டுக்கம்பளமாய், கரும்புக்காட்டு இனிப்புக்காற்றாய்,  முகம் மொய்க்கும் சாரலில் நான். என் மாலைகளில் என்னைச்சூடும் பவானியாய், நெஞ்சம் நிறையும் வாசமாய் கூடவரும் நினைவுகளைச்சுமந்து செல்லும் கூடை நான்! கூடக்கொஞ்சம் கூட்டிக்கொண்டு செல்லும் பவானியின் போக்கில் என் மனசும் போகுதே. உள்ளுக்குள் ஊஞ்சலாடும் குட்டைக்கால் கனவுகளின் சீசா ஆட்டங்களாய் மனவலைகள். விழிக்கருகாமையில் நடந்த விபத்துகள், விபரீதப்பேச்சுக்கள், எல்லாம் தாண்டி என் பயணம் ஒரு நதிநடையாய். உடலும், மனமுமாய் நீந்தும் பவானி மகள் நான். காலையும், மாலையும் உன் மடிமீது தவழும் சிறுபிள்ளை நான். அழுக்கானாலும் நீ அன்னையே, பவானி! காவிரிக்கரம் நெகிழவிடும் உன் நேசத்தின் போர்வைக்குள் கதகதப்பை உணர்கின்றேன். பவானி. சொல்லும் போதே சும்மா சலசலக்குதில்ல 😂 ! A  Gladys Stephen  Bhavani Tribute!

காலையென்பது.

Image
காலையென்பது கீற்றின் விஸ்வரூபம். காலையென்பது விடியலின் முழுமை. காலையென்பது இருளகலல். காலையென்பது உயிரூக்கம். காலையென்பது ரூபக்காணல். காலையென்பது நம்பிக்கை. காலையென்பது நிவாரணம். காலையென்பது புதுவுணர்ச்சி. காலையென்பது தேடல். காலையென்பது மகிழ்தருணம். காலையென்பது இயற்கையின் பிராத்தனை. காலையென்பது கடல் குளித்தேறல். காலையென்பது கனவின் நனவு. காலையென்பது கண்விரிப்பு. காலையென்பது துளிர்வாய்ப்ப்பு. காலையென்பது வெற்றியின் வாசல். காலையென்பது உயிருணர்தல். காலையென்பது நீங்களும் நானும் இருப்பதை உணர்த்தும் யதார்த்தம். காலையென்பது துவக்கம். காலையென்பது உயிரோட்டத்தின் தாழ்பணிவு. On your mark. Get set. Go! Run! Life is beautiful! A  Gladys Stephen  morning call! காலை வணக்கம்! 😀

என்னைக்கரைத்தல்.

Image
சூரியனும் நானும் சிப்லிங்ஸ், சகோதரம். தன்னைக்கரைத்து மாலை. என்னைக்கரைத்து கனவீடேற்றம். நானே கடன்காரி, வாராக்கடனாய் வாரந்தோறும் என்னிலிருந்து. தேவையில்லாது, தேவையற்றோருக்கு தேடிப்போய், தேவைகள் சந்திப்பதாய் தேவையேயில்லாமல் தேம்பாதிருங்கள். நான் கறிவேப்பிலை ஊறுகாயல்ல. காட்டுச்செடி! நேசகொடிதங்களும், துரோகக்கண்சிமிட்டல்களும் கண்ட நாடோடிக்கூடாரம். நன்மை செய்து மாய்வேனாகில் என் விழித்திரை வழியே வெளித்திரை காண்பேன். உள் பணக்காரியாய் ஒப்பனை செய்வதை விட, வெளிப்பாரியாய் முல்லை என்தேரில். என்னைக்கரைத்தல் பாவமெனிற் நானும் மெழுகுவர்த்திகளுமே பெரும்பாவிகள்தான். சூரியனுமே. நிலவு ஒரு பெண்ணாகி அழகாய் உலவ உன்னைக்கரைத்தலே நியாயம் சூரியா! A  Gladys Stephen  elegiac!

கோழி முட்டை.

Image
ஒரு கோழி முட்டையாட்டம் நேற்றின் போர்வை. குளிரின் கதகதப்பாய். வலிகளின் மறைப்பாய். கனவுகளுடன் கண்மூடி நனவில் எழுகின்றேன். புதைந்தவைகளை புதைத்துவிட்டு ஓடுடைத்து எழுகின்றேன். புதிதாய் பிறக்கின்றேன். ஒவ்வோர் விடியலும் ஜனனம். என் நனவுகளின் பயணம். முடிவிலாது பயணிக்கும் மனிதத்தின் பிரதிநிதி நான். நிற்காது செல்லும் மானுட நகர்வுகளின் ஒவ்வோர் இரவிலும், முடக்கும் முட்டையோட்டு துயிலெழுந்து விடியல் காண்போம் வா! சின்னக்குழந்தையாட்டம் சிறகு விரிப்போம் வா! அதிகாலை சுபவேளை, என் ஓலை வந்ததே 😀 ! A  Gladys Stephen  morning!