Posts

காலைகள் நம்பிக்கை.

ஒவ்வொரு காலையும் நம்பிக்கை. யானை பல தும்பிக்கை.  நம்மை உய்விக்கும் உதவிக்கை. ஒவ்வொரு வார்த்தையும் பேரன்பின் பெரும்பயணத்துணை. விலகாது நானெனும் உள்ளங்கை. அருகும் கை. ஆன்ம கை. இன்றின் கை. ஈயும் கை. உண்மைக்கை. ஊற்றாம் கை. என்றும் கை. ஏந்தும் கை. ஐயமற்ற கை. ஒன்றே கை. ஓங்கிய கை. ஔடத்கை. அஃதே காலையின் நம்பிக்கை! நற்காலையோடு புறப்படும் ஒவ்வொரு கைக்கும். நம்பிக்கையே வாழ்க்கை! காலைகள் நம்பிக்கையின் அடையாளம்! A  Gladys Stephen  Hopeful morning!

மாலைகள் ஓய்வதில்லை.

மாலைகள் ஓய்வதில்லை. மாறாத வாழ்வில் மாற்றங்கள்  மாறி மாறி வருவது மாறாத மாற்றம். மாற்றமற்ற மாலைகள் ஓய்வதில்லை. ஒவ்வொரு மாலையும் ஒரு பேராறுதல். உள்ளுக்குள் உள்ள எத்தனையோ சோகங்களை தாங்கும் ஒரே சுமை தாங்கி மாலையே. கைநடுங்கும் போதையானுக்கு ஒரு கோப்பை மது. பேதைக்கு மாலை. மாலையோடு மௌனிக்கும் கணங்களில் உருவாவதே அச்சடிக்கப்படாத காவியங்கள். உச்சரிக்கப்படாத சோகங்களால் உருவாவதே கண்ணீர். அர்ச்சிக்கப்பட கோர்த்தெடுக்கப்பட்ட கண்ணீர் சரங்களில் ஒரு பிந்தைய நாளின் குமுறலும், கைநெகிழ்ந்த நேசத்தின் ஞாபகங்களும் ஆதரவின்றி அழும். மாலைகள் ஓய்வதில்லை. மணக்குமா என்னவா தெரியாது. அவற்றின் இரத்தாம்பர விழிகளின் தேடலும் பாடலும் எனக்கு மட்டும் கேட்க்கும்! A  Gladys Stephen  evening edition!

திரும்பவும் வருவேன்.

காலைகள் மாலைகளாகும். மாலைகள் காலைகளாகும். நாட்கள் ஓடிப் போகும். நான் மாறுவதில்லை. சூரியனும் நானும் ஓர் குடும்பம். சுற்றிச்சுற்றி சுழலும் இயக்கக இயக்கம் எங்கள் பாதை. எங்களில் நீங்கள், உங்களில் நாங்கள். நம்மில் நாம். மானுட நகர்வில் உறவுகள் நெடுங்கதை. அன்பின் பாதையில் நாமனைவரும் ஓரினம். ஒரு தாய் மக்கள். யாதும் ஊரே! எவரும் நம்மவரே. அன்பாலே நாம். அன்புடனே நாம். எனக்கு, காலையாம் எனக்கு மறைவில்லை. வருவேன். திரும்பத்திரும்ப வருவேன். திரும்பவும் வருவேன். A  Gladys Stephen  come back morning!

இருக்க இடமில்லை!

Image
உலகெலாம் இடம். எங்கெங்கும் இருப்பிடம். காடு திறந்து கிடக்கின்றது. கடல் அலைக்கரம் விரிக்கின்றது. பாலை பயணப்பட இழுக்கின்றது. நிலவோடும், விண்மீனோடும் இருக்க வானமும் அழைக்கின்றது. கடைசியிலாவது வாவென பாதாளமும் அணைக்கின்றது. இடமாயில்லை பூமியிலும் வாகனத்திலும். எரிமலை உச்சியில் கூட இலவம்பஞ்சிக்கும் இடமுண்டு! என்ன ... பஸ்ஸில் தான் சீட்டில்லை. கால்கடுக்க தொங்கு தவம் செய்தாவது மாலையே உன்னை வாழ்வேன். நாமெலாம் சாமான்யர். வருத்தங்கள் நடுவிலும் வாழ்வை ருசிக்கும் சாதாரணர். ஒரு அதிர்ஷ்டக்காற்றில் கோடிகள் விளையலாம். இந்த சுகமான சுமைகள் கிடைக்காது. இதுவும் கடந்து போகும். இடமும் கிடைத்துவிடும். ஏதோவொன்றில்! மாலை மனசே வணக்கம்! 😀 A  Gladys Stephen  evening standing!

காலையில்...

காலையில் கடமைகள் நினை. கருத்துடன் காரியங்கள் நினை. சிந்தித்துச் செய் நீ வினை. தீர்மானங்கள் தினமும். நிறைவேற்றலே தகும். உடலால், உளத்தால் தினமும் புதிது நீ. சோர்வுகள் அயர்வுகள் மாற்றிடு க்ளாடி. எனக்குள் நான் சொல்லும் மந்திரங்களால். உயர்கின்றேன். உணர்கின்றேன். உழைக்கின்றேன். நிற்காது செல்லும் பயணமும் ஓர் நாள் நின்று விடும். செல்லாத பயணங்களாய் இல்லை. எல்லாம் ஓர் யுகப்பிரளய எரிமலை மூக்கில் முளைத்த ரோஜா நாற்று. துள்ளித்திரிந்ததொரு காலம். துணிவுடன் திரிய ஒரு காலம். காலம் எனக்குள் கனவுகள் வைத்ததுண்டு. இப்பொழுதெல்லாம் நனவுகளே என் நடை. யதார்த்தமே என் மொழி. வருவதே வாழ்க்கை. வருத்தங்கள் ஏதுமில்லை. வானம் கூரை. பூமி தரை. நானுமோர் உயிர். வலியது வாழுமென்றான் சார்ல்ஸ் டார்வின்! கிளாடி வலியவள். A  Gladys Stephen  Darvinisam. Good morning!

இது முடிவல்ல..

இன்னும் இரண்டு நாட்களில் இரட்டை சதம் தொடப்போகும்  இந்த பொழுது கவிதைகள் (  Pethusamy Venkatachalam  உபயம்) ஒரு தற்காலிக நிறுத்தத்திற்கு வருகின்றது. இதற்கென பெரிதாக ஆராய்ச்சி எதுவும் பண்ணவில்லை. கற்றதும்-பெற்றதும், வாசித்ததும்-யோசித்ததும்,, சந்தித்ததும்-சிந்தித்ததும்களிலிருந்து சிறு, சிறு துண்டுகள். நிறைய ஊக்கப்படுத்தினீர்கள். பாராட்டினீர்கள். ஆனால், எல்லா ஆரம்பங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வேண்டும். சலிப்பு என்ற நிலையை எட்டுமுன். நாமாக நின்றுவிடுவது நலம். இது ஒரு நல்ல அனுபவம். என் எழுத்தைப்பற்றி நிறைய????? கேட்டீர்கள். இதற்கு ரகசியமென்று எதுவுமில்லை. ஆன்ட்ராய்டில் எழுத சுலபமாயிருக்கின்றது. எழுதுகின்றேன். நீங்கள் எழுதும் போது இதெல்லாம் சும்மாவே. நீங்கள் எழுதவில்லை அவ்வளவே! எழுதுங்கள் காத்திருக்கின்றேன். அன்புடன், A  Gladys Stephen  conclusion!

காலைகள் ஓய்வதில்லை.

💪💪💪💪💪💪💪💪💪💪 நானும் நீங்களும் ஓய்ந்து போகலாம். காலைகள் ஓய்வதில்லை. சுற்றும் சூரியன் ஓய்வதில்லை. வானம் ஓய்வதில்லை. பருவ காலங்கள் ஓய்வதில்லை. வாழ்க்கை எனும் ஒட்டு...