Posts

Showing posts from 2018

காலைகள் நம்பிக்கை.

ஒவ்வொரு காலையும் நம்பிக்கை. யானை பல தும்பிக்கை.  நம்மை உய்விக்கும் உதவிக்கை. ஒவ்வொரு வார்த்தையும் பேரன்பின் பெரும்பயணத்துணை. விலகாது நானெனும் உள்ளங்கை. அருகும் கை. ஆன்ம கை. இன்றின் கை. ஈயும் கை. உண்மைக்கை. ஊற்றாம் கை. என்றும் கை. ஏந்தும் கை. ஐயமற்ற கை. ஒன்றே கை. ஓங்கிய கை. ஔடத்கை. அஃதே காலையின் நம்பிக்கை! நற்காலையோடு புறப்படும் ஒவ்வொரு கைக்கும். நம்பிக்கையே வாழ்க்கை! காலைகள் நம்பிக்கையின் அடையாளம்! A  Gladys Stephen  Hopeful morning!

மாலைகள் ஓய்வதில்லை.

மாலைகள் ஓய்வதில்லை. மாறாத வாழ்வில் மாற்றங்கள்  மாறி மாறி வருவது மாறாத மாற்றம். மாற்றமற்ற மாலைகள் ஓய்வதில்லை. ஒவ்வொரு மாலையும் ஒரு பேராறுதல். உள்ளுக்குள் உள்ள எத்தனையோ சோகங்களை தாங்கும் ஒரே சுமை தாங்கி மாலையே. கைநடுங்கும் போதையானுக்கு ஒரு கோப்பை மது. பேதைக்கு மாலை. மாலையோடு மௌனிக்கும் கணங்களில் உருவாவதே அச்சடிக்கப்படாத காவியங்கள். உச்சரிக்கப்படாத சோகங்களால் உருவாவதே கண்ணீர். அர்ச்சிக்கப்பட கோர்த்தெடுக்கப்பட்ட கண்ணீர் சரங்களில் ஒரு பிந்தைய நாளின் குமுறலும், கைநெகிழ்ந்த நேசத்தின் ஞாபகங்களும் ஆதரவின்றி அழும். மாலைகள் ஓய்வதில்லை. மணக்குமா என்னவா தெரியாது. அவற்றின் இரத்தாம்பர விழிகளின் தேடலும் பாடலும் எனக்கு மட்டும் கேட்க்கும்! A  Gladys Stephen  evening edition!

திரும்பவும் வருவேன்.

காலைகள் மாலைகளாகும். மாலைகள் காலைகளாகும். நாட்கள் ஓடிப் போகும். நான் மாறுவதில்லை. சூரியனும் நானும் ஓர் குடும்பம். சுற்றிச்சுற்றி சுழலும் இயக்கக இயக்கம் எங்கள் பாதை. எங்களில் நீங்கள், உங்களில் நாங்கள். நம்மில் நாம். மானுட நகர்வில் உறவுகள் நெடுங்கதை. அன்பின் பாதையில் நாமனைவரும் ஓரினம். ஒரு தாய் மக்கள். யாதும் ஊரே! எவரும் நம்மவரே. அன்பாலே நாம். அன்புடனே நாம். எனக்கு, காலையாம் எனக்கு மறைவில்லை. வருவேன். திரும்பத்திரும்ப வருவேன். திரும்பவும் வருவேன். A  Gladys Stephen  come back morning!

இருக்க இடமில்லை!

Image
உலகெலாம் இடம். எங்கெங்கும் இருப்பிடம். காடு திறந்து கிடக்கின்றது. கடல் அலைக்கரம் விரிக்கின்றது. பாலை பயணப்பட இழுக்கின்றது. நிலவோடும், விண்மீனோடும் இருக்க வானமும் அழைக்கின்றது. கடைசியிலாவது வாவென பாதாளமும் அணைக்கின்றது. இடமாயில்லை பூமியிலும் வாகனத்திலும். எரிமலை உச்சியில் கூட இலவம்பஞ்சிக்கும் இடமுண்டு! என்ன ... பஸ்ஸில் தான் சீட்டில்லை. கால்கடுக்க தொங்கு தவம் செய்தாவது மாலையே உன்னை வாழ்வேன். நாமெலாம் சாமான்யர். வருத்தங்கள் நடுவிலும் வாழ்வை ருசிக்கும் சாதாரணர். ஒரு அதிர்ஷ்டக்காற்றில் கோடிகள் விளையலாம். இந்த சுகமான சுமைகள் கிடைக்காது. இதுவும் கடந்து போகும். இடமும் கிடைத்துவிடும். ஏதோவொன்றில்! மாலை மனசே வணக்கம்! 😀 A  Gladys Stephen  evening standing!

காலையில்...

காலையில் கடமைகள் நினை. கருத்துடன் காரியங்கள் நினை. சிந்தித்துச் செய் நீ வினை. தீர்மானங்கள் தினமும். நிறைவேற்றலே தகும். உடலால், உளத்தால் தினமும் புதிது நீ. சோர்வுகள் அயர்வுகள் மாற்றிடு க்ளாடி. எனக்குள் நான் சொல்லும் மந்திரங்களால். உயர்கின்றேன். உணர்கின்றேன். உழைக்கின்றேன். நிற்காது செல்லும் பயணமும் ஓர் நாள் நின்று விடும். செல்லாத பயணங்களாய் இல்லை. எல்லாம் ஓர் யுகப்பிரளய எரிமலை மூக்கில் முளைத்த ரோஜா நாற்று. துள்ளித்திரிந்ததொரு காலம். துணிவுடன் திரிய ஒரு காலம். காலம் எனக்குள் கனவுகள் வைத்ததுண்டு. இப்பொழுதெல்லாம் நனவுகளே என் நடை. யதார்த்தமே என் மொழி. வருவதே வாழ்க்கை. வருத்தங்கள் ஏதுமில்லை. வானம் கூரை. பூமி தரை. நானுமோர் உயிர். வலியது வாழுமென்றான் சார்ல்ஸ் டார்வின்! கிளாடி வலியவள். A  Gladys Stephen  Darvinisam. Good morning!

இது முடிவல்ல..

இன்னும் இரண்டு நாட்களில் இரட்டை சதம் தொடப்போகும்  இந்த பொழுது கவிதைகள் (  Pethusamy Venkatachalam  உபயம்) ஒரு தற்காலிக நிறுத்தத்திற்கு வருகின்றது. இதற்கென பெரிதாக ஆராய்ச்சி எதுவும் பண்ணவில்லை. கற்றதும்-பெற்றதும், வாசித்ததும்-யோசித்ததும்,, சந்தித்ததும்-சிந்தித்ததும்களிலிருந்து சிறு, சிறு துண்டுகள். நிறைய ஊக்கப்படுத்தினீர்கள். பாராட்டினீர்கள். ஆனால், எல்லா ஆரம்பங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வேண்டும். சலிப்பு என்ற நிலையை எட்டுமுன். நாமாக நின்றுவிடுவது நலம். இது ஒரு நல்ல அனுபவம். என் எழுத்தைப்பற்றி நிறைய????? கேட்டீர்கள். இதற்கு ரகசியமென்று எதுவுமில்லை. ஆன்ட்ராய்டில் எழுத சுலபமாயிருக்கின்றது. எழுதுகின்றேன். நீங்கள் எழுதும் போது இதெல்லாம் சும்மாவே. நீங்கள் எழுதவில்லை அவ்வளவே! எழுதுங்கள் காத்திருக்கின்றேன். அன்புடன், A  Gladys Stephen  conclusion!

காலைகள் ஓய்வதில்லை.

💪💪💪💪💪💪💪💪💪💪 நானும் நீங்களும் ஓய்ந்து போகலாம். காலைகள் ஓய்வதில்லை. சுற்றும் சூரியன் ஓய்வதில்லை. வானம் ஓய்வதில்லை. பருவ காலங்கள் ஓய்வதில்லை. வாழ்க்கை எனும் ஒட்டு...

Of Evening...

❎❎❎❎ Travelled to the planets and Sang songs of glory. Deep within always an Unquenchable arrogance of Etymological lineages. Never compromised with Ordinary adages. Ages past I was there with Abundant love for humanity Defined with selfless journey. I move on skies to reach the Unreached. I was not a meaning. A blank blanket of dreams black. Smell the future kill the past. And I am a blank present. Not to be meant as a gift. I am a travel unearthed and unfathomed. Will go with grit! My evenings are my strength! A Gladys Stephen evening logic!

ஒவ்வொரு ஞாயிறும் ஒரு தவம்!

😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 இது வாரத்தின் தவ சுப்ரபாதம். மனித மனதுக்கான திருப்பள்ளியெழுச்சி. ஓய்வென்பதே குணமாகுதலின் முதல் மருந்து. ஓய்வெடுத்தலே வாழலின் அறிகுறி. உழைப்பவ...

மாலைகட்டும் மாதவம்.

👸👸👸👸👸👸👸👸👸 மாலை ஒரு நாளின் அறிக்கை. நடந்தவைகளின் மீள்சோதனைக்களம். சுயபரிசோதனைக்கான தருணம். திருப்பங்களில் தொலைந்த எத்தனையோ முயற்சிகளின் மீதைய பெருமூச்சு. நல...

காலையை வணங்கு!

👰👰👰👰👰👰👰👰 காலையை வணங்கு. காலையில் வணங்கு. கருத்துடன் கண்டு கனிவுடன் வணங்கு. உயிரினைப் பேணும் காலையைப் பேணு. கருத்தாய், கரிசனமாய் காலையைக்காணு. கண்கள் ஒளி பெற கால...

எனக்குள்...

🤱🤱🤱🤱🤱 எனக்குள் விடியலாய், மாலையாய், நாளின் நடனங்கள். தடங்கள் தாங்கும் ரயில் பயணம் என் நாட்கள். நிற்காது செல்லும் என் பயணத்தின் தோழமையாய் பகலும் இரவும். நாளும் பொழ...

ஒவ்வொரு நாளும்...

🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 ஒவ்வொரு நாளும் பாடம். ஒவ்வொரு நாளும் அனுபவம். ஒவ்வொரு நாளும் அதிசயம். ஒவ்வொரு நாளும் ஆர்வம். ஒவ்வொரு நாளும் அருள். ஒவ்வொரு நாளும் அனுமதி. ஒவ்வொரு நாளும் ...

மனசெல்லாம்

மனசெல்லாம்... 🌺🌺🌺🌺🌺🌺 மனசெல்லாம் செண்கப்பூ. மாலையிலே மல்லிகைப்பூ. மணம் மாறாத பிச்சிப்பூ. மணம் வீசும் ரோஸாப்பூ. தேவாரம் பாடிவரும் தேன்குழல் பூ. தென்மதுரை பாண்டியர்...

இருப்பின் தகவை தகர்த்தெறி.

👩‍🚒👩‍🚒👩‍🚒👩‍🚒👩‍🚒👩‍🚒👩‍🚒👩‍🚒👩‍🚒👩‍🚒👩‍🚒👩‍🚒 இருப்பின் தகவில் நாமென்று எதுவுமில்லை. நாம் கற்றதும் பெற்றதுமே நம்மை வனைகின்றன.   நாமென்று எதுவுமில்லை, நமதென்ற...

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞 ஆறு நாட்களுக்கு முன்பே அனிலின் ஆனந்தம் பறி போயிருந்தது. தன் நான்கு மாத குழந்தையை நிமோனியாவுக்கு பறி கொடுத்துவிட்டு துக்கிக்கக்கூட வழியில...

பொழுதின் பிறப்பே..

Image
பொழுது பிறந்தது. காலை. எப்பொழுதும் பொழுதாய். அதை காலை என்றும் மாலையென்றும் பலப் பல பெயரிட்டுப்பார்க்கும் பொழுதெல்லாம்... பொழுதின் பிறப்பே காலைக்கதிர்தானே? நானும் பொழுதும் நாளும் எழுகின்றோம். பொழுதுகள் என்னோடு. நான் பொழுதோடு. என் பொழுதுகளை எழுதும் எழுத்து என் தீரா நடை, ஓயாப்பயணம், ஓய்விலா கடமைகள். சலிப்புறேன். நானும் பொழுதும் சேர்ந்தே பிறந்தோம். நான் எழுகையில் எழுந்து, நான் துயில்கையில் துயின்று எனக்குள் நானாய் என்னைப்பிரசவிக்கும் பொழுதுகளின் பிறப்பில் என்னை உணர்கின்றேன். எனக்காய் உலவி என்னுள் உலவுகின்றேன். நீயும் நானும் ஒன்று. என்றும் விடியும் காலையில் என்னோடு காலை, காலையோடு நான்! பொழுதுக்கு வாழ்த்துகள்! அதை பொழுதில் வாழ்பவர்க்கும் வாழ்த்துகள்! பொழுதை பயனுற பேணுங்கள். A Gladys Stephen morning moments!

பவானி எக்ஸ்பிரஸ்....

Image
விரைதலும் தொலைவும்  இணைந்தே இருப்பவை. ஈரோட்டிலிருந்து பவானிக்கு விரைதலென்பது தூரம் கடக்கும் பயணம். ஏதோ ஒன்றைத்தொலைத்தது போல எப்போழ்தும் ஓடுகின்றோம். குறிப்பாக மாலைகளில். எதையும் தொலைக்கவில்லை. எது நிரந்தரமோ அங்கேயே மனம் சாயும். எங்கு மனம் இளைப்பாறுமோ அங்கேயே மனம் ஏங்கும். அவிழ்த்து விடப்படும் நேசவிலங்குகளெல்லாம் மோப்பத்திலேயே வீடடையும். மானுட விலங்கு நான் நேசத்தினால் வீடடைவேன். அங்கேயே ஜீவனின் வாசம் வீசிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு சுவரிலும் என் பார்வையின் படிமங்கள் உறைந்திருக்கும். ஒவ்வொரு அறையின் பிரத்யேக முணுமுணுப்புகளும் மரணத்திலும் மறக்காது மாலையே. தொலைவுப்பயணம் மீள்கையில் முன்னறையின் புன்முறுவலும் சமையலறையின் முறைப்பும் 藍 என்னை குபீரிடச்செய்யும். ஒரு வேளை நான் கூடடை பறவைதான். மௌன கௌதமிதான். ஆனாலும், ஒரு வாயாடிச்சிறுமியின் அத்தனை வளவளாக்களும் இன்றும் பொங்கி வழியும் நயாகரா, சிரிப்புச்சதங்கை சிதறிடும் நைல் நான். எப்பொழுதும் என் வாழ்வின் சுவாசம் இந்த அழகிய கூட்டில் உறைந்திருக்கும். ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் பவானி எக்ஸ்பிரஸ் வந்தடைந்த ஸ்டேஷன்...

பிறந்த மாலை

நாம் பிறக்கின்றோம். காலையும் மாலையும் போல பிறக்கின்றோம். காலையிலும் மாலையிலும் பிறக்கின்றோம். அனுதினமும் பிறக்கின்றோம். பிறப்போடு பிறக்கின்றோம்.இறப்போடும் பிறக்கின்றோம். யார் பிறப்பாயினும், யார் இறப்பாயினும் சேதிகளால் தேதிகளாகின்றோம்.தேதிகளினால் செய்திகளாகின்றோம். வரலாற்றின் வரிகளை எழுதுவது நம் வாழ்க்கை. வரலாறாய் மாறுவதே நம் வாடிக்கை. நம்மிலிருந்து கற்றுக்கொள்வதே தலைமுறை. மாலையே பிறந்த மாலையின் சேதி நீயே! A Gladys Stephen evening today !

பிறந்த நாள் ஞாயிறு

. ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ அதிகம் சிரத்தை காட்டாத பல வருட இதே நாளில், அம்மாவும் மறுபடியும் பிறந்திருந்தாள் என்பதை மட்டுமே நினைக்கமுடிகின்றது. அம்மா,அப்பா,நான்! வேறெதுவும...

வலிய விடியும் சூரியன்.

Image
அழைக்காமலேயே விடிகின்றது  சூரியன். அழைக்காமலேயே திறக்கின்றது வானம். அழைக்காமலேயே கூவுகின்றன விடியலின் பறவைகள். அழைக்காமலேயே எழுகின்றது விழித்த மனம். வலிய விடியும் சூரியனை உற்று நோக்கியிருக்கின்றீர்களா? விரைவு. நிற்காத விரைவு. ஒரு வேளை அது அறிவியலில் பூமிச்சுழற்சியெனலாம் ஆயினும் உணரலைத்தாண்டிய பார்வைகளிலேயே உலகை உணர்கின்றோம். நிற்க! வலிய விடியும் சூரியனோடு நாமும் எழுவோம், விரைவோம். பயணிகளின் கனிவான கவனத்திற்கு சூரிய எக்ஸ்பிரஸ் விடியலில் புறப்பட்டுள்ளது இன்னும் சற்று நேரத்தில்... A Gladys Stephen morning express and expression!

வீசும் வாசம்.

💛💛💛💛💛 மாலைக்குள் வந்து மணம் வீசுவாய் மாலையே. பகல் முழுதும் நெய்த பணிகளை முடித்துவிட்டு, பகலாரம் சூடிவிட்டு, வண்ணங்கள் சூடி, வாசம் வீசு மாலையே. எனக்குத் தெரியும் ...

காலை.

❣️❣️❣️ ஒவ்வொரு காலையும் ஒரு பெருந்தவம். இரவு வனம் விடுத்து பகற்சோலையில் பயணம் போகும் வாழ்க்கை தவம். இதை போராட்டமென நினையேன் பொறுமையுடன் ஓடுவேன். பொறுமையிழக்கும...

பயணங்கள் முடிவதில்லை...

👣👣👣👣👣👣👣👣👣👣👣 வாழ்வே ஒரு பயணம் தான். அது தொடர் பயணம். நடை, இரு சக்கரம், மூன்று சக்கரம், சிற்றுந்து, பேருந்து, தொடரி, ஆகாய, கடல் மற்றும் அண்டவெளி என பயணங்கள் முடிவதில்ல...

காலையின் வணக்கம்.

🕗🕗🕗🕗🕗🕗🕗🕗🕗 காலையில் நாம் சொல்லும் வணக்கத்தை விட காலையே நமக்குச் சொல்லும் காலை வணக்கம் அருமை. காலை நம்மை வரவேற்கின்றது. நாம்தான் எழ மறுக்கின்றோம். அத்தனை வளங்கள...

ஒற்றைக் கால் தவம்

. ✒️✒️✒️✒️✒️✒️✒️✒️ காலையில் நான் பங்கு பெறும் கால ஓட்டபந்தயத்தில் கால் கடுக்க நிற்பதென்பது அனுதின யோகா. இடுப்பு பிடித்து நிற்பதென்பது வயதான யோகா. கண் பூத்து நி...

நொடிகளை துரத்தி...

🏃🏃🏃🏃🏃🏃🏃🏃 நொடிகளை துரத்துகின்றேன். விடிகையிலேயே என்னோடு ஓட்டப்பந்தயத்தில் நேரம். நேரத்தோடு ஓடுகின்றேன். நேரத்தை துரத்துகின்றேன். நேரத்தின் பாதையில் நேரத்தை ...

பேரமைதி.

✋✋✋✋ மகா இரைச்சல்கள் மத்தியில் முகிழ்வதே பேரமைதி. ஓசைகளற்ற பிராந்தியத்தில் துயில்வதன்று நிசப்தம். பெருங்காற்றின் மத்தியில் பூத்திருக்கும் சிறுமொட்டே சமாதான...

நீ நலம்

. 🤗🤗🤗 காலையே நீ நலம். நான் நலம், ஆகவே நீயும் நலமே. என் நினைவுகளாலேயே நீ. ஆகவே நீ நலம். ஒவ்வொரு இரவிலும் நான் உடைத்துப்போட்ட எந்திரி! காலையில் என்னை நானே செய்து கொள்கின்...