Posts

Showing posts from August, 2018

என் மன வானில்..

நானோர் கூட்டுப்புழுவாய் பட்டுநெசவாலையில் செய்யப்பட்ட பாசஜந்து. தாய் மடி, தந்தை கரம் தவழ்ந்த அநேகி! சிப்லிங்ஸ், கஸின்ஸ் கரிசனங்களில் வாழ்ந்த சிறுபறவை. அன்றிற்சிறகாய் ஆல்விழுதாடிய அன்பாளி! எல்லாம் தொலைந்து திசைகள் திகைத்து நிற்கையில், நான் வெறுமைச்சுமந்து நிற்கும் மெய்யாகின்றேன். எழுதலும், நடத்தலும், சமைத்தலும், உழைத்தலும், திரும்பலுமாய்... உயிர்மெய்பயணமாய் பொய்க்காயம் சுமக்கின்றேன். நினைவுச்சுழலடிக்கும் ஞாபககிட்டங்கிகளை வெறித்துப்பார்த்த விபத்துகளின் தொடர்ச்சியால் என்னைத்தொலைத்து நானே தேடுகின்றேன். என் பெயரை மறந்தே நாளாச்சு. என்மனவானின் மாலையே தூக்கம் கொடு. ஒரு நல்ல மாலையின் வாய்ப்புகள் கிட்டாதே போயிருந்தால், வானம் பார்த்த என் பெயர்பாறையை நான்சுமந்திருப்பேன் . மாலையே வா மங்கைக்குள் வா. மயக்கங்கள் தீர்த்து மயக்க வா! என்மனவானில் தோன்ற வா! A  Gladys Stephen  evening wreath!

சொல் சொலல்.

உள்ளுக்குள் பேசும் பேசாத பேச்சுக்களை  இரவுகளில் நிறைய புதைத்திருப்போம். வாசிக்கப்படாத கடுதாசிகள், கடுப்பேற்றும் மின் பிம்பங்கள். சிரிப்புவராத மீம்ஸ், பல்ஸ் பார்க்கும் ஸ்மைலீஸ். அறிவார்ந்ததாய் காட்டமுனைந்து தோற்றுப் போகும் கடுப்பேற்றும் கமண்ட்ஸ். நச்சரிக்கும் எச்செரிச்சல்கள். நிறைய அன்பின் நிற்காத வார்தையனுப்பல்கள். தூக்கம்கேட்கும் விழித்திரைகள் இவற்றையும் தாண்டி, ஒரு தூக்கமாத்திரைத்தொந்தரவாய் துரத்தும் அரூப வௌவால்கள். பெயர்தெரியா அமானுஷ்யங்களின் காட்சிப்பிழைகள், தோன்றும் பிழைகள். இவை தாண்டியும் இரவுகள் நம்மை குணப்படுத்தியிருக்கின்றன. இந்த நிர்மலமான புதிது. துளிரிலைப்புதிது. பிறந்தகுழந்தையின் பாத மெலிசாட்டம் புதிது. இன்னொரு காலை. இன்னொரு சொர்க்கம்! காலையின் கதவுகள் திறந்தாயிற்று. கற்பனைக்கெட்டாத இந்த காந்தர்வக்காலைக்காய் காத்திருப்பின் காண்டமிசைப்போம். காவியக்காலையின் காப்பிய மாந்தராவோம். சொல் சொல்லலிலும், சொல் சொலலுமே வாழ்க்கை! நாம் சொல்லலா? சொலலா? விடைகளோடேயே விடிகின்றது காலைகள். வாழும் வாழ்த்துகள்! A  Gladys Stephen  word!

தேடினேன்...

💗💗💗💗💗 உயிருக்குள் கொலுவைத்த கோபுர வாசலைத்தேடினேன். நெஞ்சுக்குள் நிதம் தொழும் நினைவைத்தேடினேன். வாசம் வீசிய வாடாமல்லியைத் தேடினேன். வசந்த கிளைகளில் பன்னீராய...

காலை கண்விழித்துனை...

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 காலை கண் விழித்துனைக் காண்கின்றேன். கண்மணியாய் கருத்துடன் காக்கின்றேன். உள்ளொளியாய் உள்ளுக்குள் பூஜிக்கின்றேன். அருளாய், அருள் நதியாய் அகிலத்தி...

சுமை தாங்கி.

💎💎💎💎💎 பகல் முழுவதும் பல வித பாரங்கள். நெஞ்சுருக்கும் சுமைகள். நீங்கா நினைவுப் பெருமூச்சுகள். கடன்கள். கடமைகள். கண்ணியம் காக்கும் கண்பார்வைகள். ஆடை, அங்க மூடல்கள். ...

காலைத்தென்றல்..

🌤️🌤️🌤️🌤️🌤️🌤️🌤️ இதமாய் வீசும் தென்றலின் சுகத்தோடு இனிய காலை. இதயம் மகிழும் அழகிய காலை. பனி விலகி பகலவன் எழுகின்ற பரிசுத்த காலை. கவலைகள் தீர்த்திடும் கனிவுடன் க...

ஏகாந்தம்...

🧘🧘🧘🧘 எப்பொழுதும் கூட்டத்தில் தனியே. முப்பொழுதும் தோற்றத்தில் தனியே. எண்ணத்தில், வண்ணத்தில் தனியே. கூட்டத்தில் நிற்பதாய் காட்டிக் கொண்டாலும். குதூகலத்திலும் து...

நலமா?

🤗🤗🤗 நலம் நலமா? நேற்றின் துயில் நலமா? இரவை இனிதாய் தூங்கிப்பெற்ற நலம் நலமா? தூக்கமற்றுப்புலம்பும் மானுடர் நடுவே தூங்கிச்செரித்த கனவுகள் நலமா? சேமித்த ஆரோக்கியம் ...

நதிபோலே நான்

🌊🌊🌊🌊🌊🌊🌊 அடித்துச்செல்லும் திசையெங்கும் என் பயணம். அகன்றதோ, குறுகியதோ அதன் போக்கில் என் பயணம். தடைகள் தாண்டி தயங்காது செல் பயணம். தானாய் தாவித்திரியும் காட்டாறா...

ஓண மாலை

Image
துயரங்கள் தான் வடித்த  கேரள நன்நாட்டிளம் நெஞ்சுக்கு என் ஓண மாலைக்கடுதாசி. காலையின் கொண்டாட்டங்கள் வரலாற்றில் முதல்முறையாக பொலிவிழந்து. தன் மன்னனைக்காண கோலமிட்டு  யுகயுகமாய் காத்திருக்கும்  மக்களுக்கே தெரியும்  மாவலியின் வலி மகா வலி என்று. ஆனாலும், புதிய கேரளம்  உருவாகுமென அனைத்துலகும் எதிர்பார்க்கின்றது. மலையாளிகள் என்ற பெயரோடு ஒட்டிக்கிடக்கும் சில அடைமொழிகளையும், அடையாளங்களையும் தாண்டிய புதிய ஓணமாய் இன்று புலர்ந்திருக்கின்றது. முடிந்திருக்கின்றது! ஓணமாலையிலும் மலையாளம் என்றும் மானுடத்தில் மணக்க மாலையில் வாழ்த்துகின்றேன்.

சேற்றில் முளைத்த செந்தாமரை

தாமரையை அப்படிச்சொல்வார்கள். வாழ்க்கையும், காலையும் கூட அப்படித்தான். நேற்றெனும் சகதிகள் இப்பொழுதும் அப்படியே இருக்கையில்தான் இன்றுகள் விடிகின்றன. ஆயினும் நாளையை நோக்கிய ஓட்டத்தில் நேற்றின் சகதியெல்லாம் சங்கதிகளே அல்ல. இதில் தான் நாம் வேரூன்றியுள்ளோம். இதிலிருந்துதான் கிளைத்தெழுவோம். தாமரையாய், தாரகைகளாய்! எப்பொழுதும் ஏதோ ஒன்று, ஏதோ ஒன்றில் ஒட்டிக்கிடப்பதே மானுட பந்தம். பிணைபடலில் கடன் தீர்த்தல்,  கடமையாற்றல் என பிறவிப்பயன் போக்கும்  அனுதின அரும்புதல்கள் பாற் அனுசரணைகள் அதிகமே. சில சந்தன வாசம், சில சாக்கடை வீச்சு. சமநிலைச்சவாரியாய் வாழ்ந்து முடிக்கவே வாழ்க்கை! வேறொன்றுமில்லை. இந்தக்காலை இன்றின் காலை. மாலைக்குள் நேற்றாகப்போகும் நாளைகளே இன்றும் என்றென்றும்! தாமரைகளாய் மலர்வோம் தரணிவெல்வோம். (இது கட்சி சார் பதிவன்று.) A Gladys Stephen Lotus morning!

மாலையிலும் கூட இரு..

💞💞💞💞💞💞💞💞💞 காலைகளில் கூடவே எழுகின்றாய். மாலைகளில் காணாமற் போகின்றாய். கரம் நெகிழ விடாத அன்பே இடையிடையே எங்கே செல்கின்றாய்? வார்த்தைகள் தேவைப்படும் பொழுது மௌன...

ஓயாத காலை..

🎷🎷🎷🎷🎷🎷 காலைகள் ஓய்வதில்லை. உயிருள்ளவரை காலைகளே உயிரெழுப்பிகள்! மனசுக்குள் ஆயிரம் மௌனக்கசப்புகள் மறைந்து கிடக்கலாம். ஆத்மாவின் அசைவு அசாத்தியமானது. உயிர், மனம...

கண்ணுக்குள்...கண்ணுக்குள்

.. ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ கண்ணுக்குள் உன்னை வைத்து, கார்குழலாம் பெண்ணே, கார்மேக மாலைப்பெண்ணே, உன்னை வைத்து காத்திருந்தேன்      கண்ணே கண்மணியே, மாலையாம் தோட...

காலைகள் எனும் கருணை.

🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡 காலைகள் எனும் கருணை கண்டிடுவீர் தினமும். வாழலின் வழிகள் எல்லாம் வந்திடுமே தினமும். ஒரு நல்ல காலை மிக நல்ல நாளின் ஆரம்பம். ஒரு நல்ல காலை பாதி முடிந்த ம...

அருகினில் மாலை...

🌛🌛🌛🌛🌛🌛🌛🌛 அருகினில் மாலை, அணிந்திடும் சோலை. நெருங்கிடும் வேளை, நிலவுக்கு வேலை. மங்கிடும் சூரியன், மின்னிடும் தாரகை. நிலமிடம் போர்வை, நிலவிடம் விளக்கு. நலமுடன் வாழ ...

பக்ரீத் காலை.

☪️☪️☪️☪️☪️ வரலாற்றின் படி இது இப்ராஹிமின் தியாகம். இறைவனுக்காய் எதையும் தரத்துணிந்த வேகம். இறையியல் விவேகம். ஆயிரமாயிரம் ஆண்டுகள்      தாண்டியும் பேசலாகும்  ...

தினந்தோறும்...

🏇 🏇 🏇 🏇 🏇 தினந்தோறும் நானெழுதும்                         திருவாசகம் உனக்கே. ஓ மனமே! எனக்கான என் பிரார்த்தனை. எனக்குள் என் பிராத்தனை. உருகாயோ நெஞ்சமே, உருகாயோ நெஞ்சமே. ...

முன்னிரவு..

👁️👁️👁️👁️👁️ மாலை மயங்கிற்று. இருள் கவிழ்ந்தது. அழகாய் தோன்றும் வானில், அழகுக்கழகாய் மீன்களும் சந்திரியும். வீசாத காற்றாய் பகலுஷ்ண மிச்சம். பக்கத்தில் பாயும் பவ...

நீள் நெடும் பயணம்..

🛤️🛤️🛤️🛤️🛤️🛤️🛤️🛤️ வானமே எல்லை என நீளும் வாழ்க்கை. வாழலின் வருத்தங்கள் தாண்டியும் வாழ்க்கை. முடிவற்ற முடிவுகளை முடித்து வைக்கும் வாழ்க்கை. தொடர்ந்து செல்லும...

மாலையெனும் மாலை..

💐💐💐💐💐💐💐💐💐 மாலையெனும் மாலையில் சூடிக்கொண்டேன் நினைவுகளை. வாசமாம் சுவாசத்தின் நேசத்திலேயே வாழ்ந்திருப்பேன். தீண்டாத தென்றலாய், பாடாத பாடலாய் உள்ளுக்குள் ஓர்...

எப்பொழுதும்...

🌟🌟🌟🌟🌟🌟 எப்பொழுதும் புத்துணர்வாய், எங்கெங்கும் சுதந்திரமாய், முப்பொழுதும் சந்தோஷமாய், இப்பொழுதே வாழ்ந்து விடு. இப்பொழுதை வாழ்ந்து விடு. திரும்ப திரும்ப சுழன்...

இளைப்பாறு நெஞ்சே...

🛌🛌🛌🛌🛌🛌🛌🛌 விடியல் துவக்கி, அடையல் வரை உடையா நெஞ்சே இளைப்பாறு. உறுதியோடு எனைக்காத்தாய் , ஓயாத இமையெனக்காத்தாய், இதயங்காத்தாய். வல் வினை வென்று, வருத்தம் கொன்று, பக...

காலை வணங்கி...

🙏🙏🙏🙏🙏🙏🙏 காலை வணங்குகின்றேன். காலையை வணங்குகின்றேன். வாழலாம் வாழ்விற்கு வரவேற்பாம் காலைக்கு காலை வணங்குகின்றேன். நாமெலாம் சமுதாய உயிரினங்கள். கூடி வாழ்ந்திடு...

போதும்..

. 🤷🤷🤷 ஒரு குறிப்பிட்ட கால                        கெடுவிற்குப்பின்னர்  எல்லாமே போதுமென்றாகி விடுகின்றது. மழை உட்பட! வெயில் கூட! பூமிப்பந்தில் உயிர் வாழத்துவங்கிய...