சேற்றில் முளைத்த செந்தாமரை

தாமரையை அப்படிச்சொல்வார்கள்.
வாழ்க்கையும், காலையும் கூட அப்படித்தான்.
நேற்றெனும் சகதிகள் இப்பொழுதும் அப்படியே இருக்கையில்தான் இன்றுகள் விடிகின்றன.
ஆயினும் நாளையை நோக்கிய ஓட்டத்தில் நேற்றின் சகதியெல்லாம் சங்கதிகளே அல்ல.
இதில் தான் நாம் வேரூன்றியுள்ளோம்.
இதிலிருந்துதான் கிளைத்தெழுவோம்.
தாமரையாய், தாரகைகளாய்!
எப்பொழுதும் ஏதோ ஒன்று,
ஏதோ ஒன்றில் ஒட்டிக்கிடப்பதே
மானுட பந்தம்.

பிணைபடலில் கடன் தீர்த்தல், 
கடமையாற்றல் என பிறவிப்பயன் போக்கும் 
அனுதின அரும்புதல்கள் பாற் அனுசரணைகள் அதிகமே.
சில சந்தன வாசம், சில சாக்கடை வீச்சு.
சமநிலைச்சவாரியாய் வாழ்ந்து முடிக்கவே வாழ்க்கை!
வேறொன்றுமில்லை.
இந்தக்காலை இன்றின் காலை.
மாலைக்குள் நேற்றாகப்போகும் நாளைகளே இன்றும் என்றென்றும்!
தாமரைகளாய் மலர்வோம் தரணிவெல்வோம்.
(இது கட்சி சார் பதிவன்று.)
A Gladys Stephen Lotus morning!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.