ஏதோ ஓர் மூலையில்
...
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
அன்பாலே நாம் சொல்லும்
அன்பான வார்த்தைகள்.
ஏதோ ஓர் மூலையில்
யாருக்கோ ஆறுதல்.
நேரில்தான் பார்த்ததில்லை,
நெருங்கி நின்று கண்டதில்லை.
அன்பாலே நாம் அருகிருப்போம் அன்பாலே.
காலைகள் புதிது.
காரியங்களும் புதிது.
காத்திருந்து காணும்
காரணங்கள் புதிது.
வாடாத மலராக மணக்கட்டும் காலையிது காரிருளை
அகற்றுகின்ற கிரணமாக மாறட்டும்.
வாழ்த்தென்பது வெறும்
வார்த்தைகள் அன்று.
வாழ்வின் தோள்.
பரஸ்பர வாழ்த்துகள்
லைக்குகளின் எண்ணங்களுக்கன்று, கமண்ட்டுகளின் கர்வத்திற்கன்று.
அன்பு தொடர்கின்றதென்ற அத்தாட்சி, அன்பாட்சி இச்சாட்சி .
அன்பான வாழ்த்துகள்,
அழகிய காலையில்.
நல்லவை நடக்க நல்ல வாழ்த்துகள்!
A GGladys Stephenmorning wish from a corner of the earth!
Comments
Post a Comment