நீள் நெடும் பயணம்..
🛤️🛤️🛤️🛤️🛤️🛤️🛤️🛤️
வானமே எல்லை என
நீளும் வாழ்க்கை.
வாழலின் வருத்தங்கள்
தாண்டியும் வாழ்க்கை.
முடிவற்ற முடிவுகளை
முடித்து வைக்கும் வாழ்க்கை.
தொடர்ந்து செல்லும்
பாதைகளின் காட்சிகள்
எத்தனை, எத்தனை.
மனமே நீ மயங்காதே.
நீள் நெடும்பயணமாம்
வாழ்வில் நிற்காது செல்.
வசந்தங்கள் விடை பெறலாம்,
வாலிபம் முடிந்து போகலாம்.
வாழ்வு தொடரும்.
வாழ்வே தொடரும்.
வாழ்ந்திருந்தால் தொடரும்
வாழ்க மனமே. வாழ்க மானுடமே. காலையெலாம் வாய்ப்புகளே. காத்திருந்து கற்றுக்கொள்.
கடமைகளை கற்றுக்கொள்.
நீள் நெடும் பயணமிது!
A Gladys Stephen Good Morning !
Comments
Post a Comment