ஒரு நாளின் கதை.


☁️☁️☁️☁️☁️☁️☁️
ஒரு நாளின் கதையில்
பல அத்தியாயங்கள்.
வானவில் போல்.
ஏழு சுரம் போல்.
வேறுபட்ட சம்பவங்கள்.
மாறுபட்ட மனிதர்கள்.
இவை மாறுவதில்லை.
எல்லாவற்றிலும்
ஒரு பொது நியதி உண்டு.
பொருள் உண்டு.
இந்த பாதை வழியேயே எல்லோரும் கடந்து செல்கின்றோம்.
மாலை என்பதில் எல்லோருக்கும் மகிழ்ச்சியோ என்னவோ,
உழைத்து ஓயும் மானுடர்க்கு
மாலை மிகப்பெரும் ஔடதம்.
கவின் காட்சிகளும்,
பறவைகள் " வீட்டுக்குப்போறேனே" பாடும் பாட்டும், அந்தி வானும்,
அரும்பும் விண்மீன்
சிமிட்டல்களும் கண்டால்...
துள்ளாத மனமும் துள்ளும்!
பாடாத நாவும் பாடும்.
இயற்கையை ரசியுங்கள்
இளம் மாலையில்.
Just leave the smart phone and
watch the sky!
Happy evening.
Gladys Stephen star watch!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.