புதிதாய் பிறந்தேன்.

நேற்றின் காரணிகள் ஒழிந்தன.
இன்று புதிதானேன்.

இருள் அகன்றது.
பகலே நானானேன்.
சூரியனென்பது வெம்மை மட்டுமன்று.
செம்மையும் தான்.

என்னை செம்மைப்படுத்திய சூரியனே.
தின விடியலின் அடையாளமாய் நீயெனினும்.

செம்மைகளின் ஞாபகமாயே நான் தினமும் பிறக்கின்றேன்.

புதிதாய் பிறந்தவள் நான்.
பழையவளின் சுவடுகள் இல்லாத மானுடம் இல்லை.

ஆயினும் பழையவைகளிலேயை படுத்துறங்க நானொன்றும் தவறுகளின் தொடர்ச்சியன்று.

ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன்.
வீழ்த்தப்பட நானொன்றும் சிட்டுக்குருவியன்று.

சிகரங்கள் சுற்றும் ராஜாளி நான்.

புயல் காற்றை மோதி வானம் தொடும் பெரும்பறப்பு என் பரப்பு!

மேத்தாவின் காத்திருந்த காற்று நான்.
புறப்பட்டு விட்டால்...

புயல்!

தூள் கிளப்புங்க இது நம்ம காலை.
நல்ல காலை!

A Gladys Stephen optimising greetings!
Happy morning!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.