திரும்பவும் தண்ணீர்.


⛲⛲⛲⛲⛲⛲⛲⛲

மழையில்லை ஆனால்...
மதகுகள் திறந்து
காவேரி பாய்ச்சல்...

பவானிக்கு காய்ச்சல்.
ஏழை பாழைகளின் கூச்சல்.

நெஞ்சம் உடைகின்றது.
தண்ணீர் கேட்டு
கதறிய நாட்களில்
வானம் பார்த்த
விவசாயியின் கூக்குரல்
கேட்காது போனதே.

இப்பொழுது தான்
மூழ்கக்கூடாதென
திறந்து விட்ட காவேரிக்கரையோர காட்டாற்றில் பவானி பாவங்கள் மூழ்கியழுவதை சகிக்கவியலவில்லை.

கூடுதுறை தண்ணீர் குவியலில்
நெஞ்சம் குலைகின்றது.
வரமா?
சாபமா?

அரச துரோகங்களால் அவதியுறும் மானுட மாநிலங்களே மனித நேயத்தை அணைகட்டாதீர்.

"தண்ணீர் கேட்டீர்களே இந்தா புடிச்சுக்கோ", என்று இப்பொழுது அடைத்துப்பாருங்களேன்.

இதை விடக்கொடிதான
துயரம் வரும் நாளில்,
துக்கிக்கக்கூட
நாமிருக்க மாட்டோம்.

அடுத்த முறையாவாது
அமர்ந்திருந்து பேசுவோமா?

தண்ணீர் யுத்தம் முடியட்டும்.

A Gladys Stephen Cauvery tearful evening on Bhavani Roads!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.