மாலையெனும் மாலை..
💐💐💐💐💐💐💐💐💐
மாலையெனும் மாலையில்
சூடிக்கொண்டேன் நினைவுகளை.
வாசமாம் சுவாசத்தின் நேசத்திலேயே வாழ்ந்திருப்பேன்.
தீண்டாத தென்றலாய்,
பாடாத பாடலாய்
உள்ளுக்குள் ஓர் நினைப்பு
உனக்காக ஓர் நினைப்பு.
நினைத்தாலே இனிக்குமுங்க
நீங்காத ஞாபகங்க.
ஆலோலம் பாடிவந்த பாக்கோலம் போட்டுவச்சேன்.
நாளெல்லாம் நடு வீட்டில்
நான் வணங்கும் உன்ன வச்சேன்.
ராசாத்தி மலராட்டம்,
மனசெல்லாம் மண் வாசம்.
பூத்திருக்கே புதுப்பூவு
நீ பறிச்சா நோகாது.
சூடிக்கொடுத்தவள்
சுடர்கொடியே
பாவையாண்டாள் படுந்துயரே.
பாமாலை பாட்டெல்லாம்
காமாலைக்கண்ணுக்கு
மஞ்சளடி.
விளங்காதவர் வாய்க்கெல்லாம்
அவமாலை அமங்கலமே.
உள்ளத்தினார் உன்னத காதற் கொண்டுனைப்பாடினேன். உறுதுணையாக்காத்திடு
உயர்நினைவே,
உயிர்நிலையே வாழ்வித்திரு
வானொளியே, பூ மாலையே!
A Gladys Stephen divine garland to the evening deity!
Comments
Post a Comment