கலைஞர் மாலை...


🌄🌄🌄🌄🌄🌄🌄
கால்கடுக்க நின்று கண்டு,
கண்ணீரை ஓட விட்டு 
ராஜாஜி அரங்கினிலே ஓலமிட்டு, உள்ளம்தான் உடைய விட்டு,
உள்ளுக்குள் ஆண்டவனை இழந்துவிட்டு, கதறித்தான் கூச்சலிட்டு,
கைபிசைந்து நிற்கின்றாய்,
கதறியழுது நிற்கின்றாய்.
ஆறுதல்தான் யாருண்டு?
இனி தேற்றுவதற்குத்தான் யாருண்டு?
முரசொலியால் முத்தமிட்டாய்,
முத்தமிழும் செப்பனிட்டாய்.
முந்தி வரும் வினையெல்லாம் முப்பொழுதும் தீர்த்து வைத்தாய்.
கோபாலப்புர கோவிலெனவே கோட்டையாகி சாமியானாய். பகுத்தறிவின் பகலவனாய் பாருக்கெல்லாம் பாடமானாய்.
தலைமுறைகள் பாடமானாய்,
தமிழுக்கே தடாகமானாய்.
அரசியலாம் கழைக்கூத்தில் ஆடித்தகர்த்தெறிந்தாய்.
கோட்டையுந்தன் வீடானாய்,
கோவிலடை கொடியரெலாம்
கோபிக்கும் கொள்கையானாய்.
வாழ்வோடு பெயரானாய்
வாழ்வுக்கே திசையானாய்.
சமநீதிப்பெரும்போரில் சாமான்யனுக்கும் சரி செய்தாய்,
அந்தண வேதமெலாம் அர்ச்சிக்க
ஆவன செய்தாய்,
சீர்திருத்த மணமெல்லாம்
சிறப்புடனே செய்து வைத்தாய் ,
நம்பிக்கை தனைத்தந்து நாடாளும் வாய்ப்பு தந்தாய்.
குடிசையெல்லாம் மாற்றி வைத்து குபேரராய் ஆக்கிவைத்தாய்.
நாடாளும் வாய்ப்புதனை
வர்ணருக்கும் வழங்கிவைத்தாய்.
தமிழாழும் தரணிக்காய்
செந்தமிழால் தேர்வு வைத்தாய்.
ஆசிரியரும்-ஊழியரும்
நம்பிக்கையுடன் நாடி வர
வீடு வைத்தாய்.
கோபாலப்புரந்தனையே மருத்துவமனைக்காய் எழுதிவைத்தாய்.
என்னென்ன செய்து வைத்தாய் என்றெண்ணிப்பார்க்குமுன்னே எங்களையே விட்டுப்போனாய்.
புதைத்து விதைக்கின்றோம் விடிந்து முளைத்திடுவாய்.
மரணமில்லை இனி உனக்கு,
மனசுக்குள் நீ இருக்க.
சென்று வா என்கின்றேன்,
சிறு பருவ சிறுமியாட்டம்.
கருணாப்பா மகள் Gladys Stephen ன் இரங்கற்பா!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.