ஓண மாலை

துயரங்கள் தான் வடித்த 
கேரள நன்நாட்டிளம் நெஞ்சுக்கு
என் ஓண மாலைக்கடுதாசி.

காலையின் கொண்டாட்டங்கள்
வரலாற்றில் முதல்முறையாக பொலிவிழந்து.
தன் மன்னனைக்காண கோலமிட்டு 
யுகயுகமாய் காத்திருக்கும் 
மக்களுக்கே தெரியும் 
மாவலியின் வலி
மகா வலி என்று.

ஆனாலும், புதிய கேரளம் 
உருவாகுமென அனைத்துலகும் எதிர்பார்க்கின்றது.
மலையாளிகள் என்ற பெயரோடு
ஒட்டிக்கிடக்கும் சில அடைமொழிகளையும்,
அடையாளங்களையும் தாண்டிய
புதிய ஓணமாய் இன்று புலர்ந்திருக்கின்றது.
முடிந்திருக்கின்றது!

ஓணமாலையிலும்
மலையாளம் என்றும்
மானுடத்தில் மணக்க மாலையில் வாழ்த்துகின்றேன்.

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.