போதும்..
.
🤷🤷🤷
ஒரு குறிப்பிட்ட கால கெடுவிற்குப்பின்னர்
எல்லாமே போதுமென்றாகி
விடுகின்றது.
மழை உட்பட!
வெயில் கூட!
பூமிப்பந்தில் உயிர் வாழத்துவங்கியதே
சில சராசரி விகிதங்களினால்தான்.
அவை மீறப்படுகின்றன.
சமநிலை சிதைக்கப்படுகின்றது.
எல்லா சுயநலங்களும்
ஒன்று சேர்ந்து கும்மியடிக்கும் சதுப்பு நிலமாகிவிட்டது தமிழ் மண்.
தமிழ் மனம்!
இந்த வெள்ளநீர் வடிந்தவுடன்,
அடுத்த பேரழிவு வரை
ஆக்கிரமிப்புகள் தொடரும்.
நம்மளவில் நேர்மையை
இயற்கையிடம் காட்டாதவரை, இயற்கைப்பேரழிவு என்பது
இயற்கையாகவே தொடரும்.
புலம்பிப்பயனில்லை.
பவானி சுத்தமாகியிருக்கின்றாள்.
சுத்தமாகத்தொடர விடுவோம் வாரீர்.
(காதுள்ளவர் கேட்க்கக்கடவீர்)
A Gladys Stephen evening call!
Comments
Post a Comment