காலை கண்விழித்துனை...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
காலை கண் விழித்துனைக் காண்கின்றேன்.
கண்மணியாய் கருத்துடன் காக்கின்றேன்.
உள்ளொளியாய் உள்ளுக்குள் பூஜிக்கின்றேன்.
அருளாய், அருள் நதியாய் அகிலத்திரட்டுப்பெருவரியாய் உன்னைப்பேணுகின்றேன்.
அகமாய், புறமாய் அருகிரு நிழலாய், அருமருந்தாய் , திருவிருந்தே, பெருமகிழ்வேயுனைப்போற்றுகின்றேன். பெற்றவளாய், தோளுற்றவனாய், தொகைமீட்டவனாய், தொண்டரடிதொழுதோழமையாய் சரணடைகின்றேன்.
சாபல்யம் காணும் சமர்ப்பணமாய் வாழ்வினுக்கு வாழ்த்துகின்றேன். வாழலின் வர்ணவில்லில் நானுமோர் முந்தக்கலவை.
வேதிமப்பிரளய வேகசிந்தை வேடந்தாங்கல்.
அன்புடனருளும் ஆகம வேதமாயென்தன்நாதம்.
வெண்புரவிப்பாய்ச்சலாட்டம் திசைபரவும் மனோவேகம்.
சூழலாம் புவியில் காலையே கருணை.
காலையாம் கருணையே மாவிளக்கேந்தி, மாக்கோலம் பூண்டு பாக்கோலம் பாடுகின்றேன்.
காலையே தவஸுப்ரபாதம்!
Gladys Stephen பள்ளியெழுச்சிப்பாடல்!
Good morning friends!
Comments
Post a Comment