மெளன மாலைகள்...

கோத்தெடுத்தச்சரம் வாடியதோ, கொண்ட வாசம் மாறியதோ,
குன்றேறி வாசம் செய்த குன்றா மணிவிளக்கு குலைந்ததோ?
ஆறா துயரெமக்கு,
ஆதரிக்க யாரிருக்கு?
வாடா மல்லிகளாய்,
காயாத நினைவிருக்கு.
உள்ளார வீற்றிருந்து,
உலையெல்லாம் வேகவைத்து, உடன்பிறப்பே என நெஞ்சணைத்து, கொஞ்சும் தமிழெடுத்து,
குலையாத வரி எழுத்து,
வாசமாம் காவியத் தேன் படைத்து,
ஆறாய், காட்டாறாய்,
ஆடி வரும் சதிராடிவரும்
காவிரி கரம்பிடித்து,
வற்றாத வார்த்தையெல்லாம் பொற்றாமரை குளம் நனைத்து,
குயவனாம் கையனைய
குலவிச்சை கலைவடித்து, கொண்டவளாம் கன்னித்தமிழ்தனில், குங்குமச்சிமிழ்தனில்
சந்தன சந்தமிசைத்து,
சதிராடும் இசை படித்து,
இமைகளாம், இரு விழிகளாம் ஒளிப்பேழைத்திறந்து,
உயிராம் தமிழில் உயிர் வடித்து உலகைத்துறந்து
உயர் வான் கொண்ட
உடன்பிறப்பே, உலகத்தமிழே.
வந்தாரை வாழ வைத்து, வருத்தமெல்லாம் துரத்திவைத்து ,
கழகத்தோடு கலக்க வைத்து,
கழகமே காதலென நினைக்க வைத்து, முத்தமிட்டு முரசொலியில் ஆழ வைத்து, அகழ வைத்து
ஆண்டவ கட்டளையென
அடி பணிய வைத்து,
கலைஞரேயென கால்கடுக்க
நிற்க வைத்து,
பேச்செல்லாம் புகழ வைத்து, பெரும்பாதை நோக்கி வைத்து, பேரணியாய்,
போரணியாய் மாற வைத்து,
சிறை வாசமெல்லாம் ருசிக்க வைத்து, மு.க வாகிய நானை நினைக்க வைத்து...
வருவாயென காக்க வைத்து,
வாராது போனதை நினைக்க வைத்து, கதற வைத்து, புலம்ப வைத்து, மீளாத்துயிலாய் ஓய்ந்து தலைவா... 😢!
என்று காண்போமோ?
Gladys Stephen silent garland in a silent evening!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.