தீர்மானங்களின் காலை.
கடன்களால் மட்டுமே புலர்வதன்று வாழ்க்கை.
கடமைகளால் அருகுவது.
இரவெனும் மயக்கம் தெளிந்து,
காலை அரும்புகையில் நினைவுகள் மெல்ல வலுவாகையில்...
சில தீர்மானங்கள் எல்லோருக்குள்ளும்.
சுத்தம் செய்வதிலிருந்து,
செய்யாமல் விட்டவை தொடர்ந்து வாழ்வின் மாற்றம் வரைக்குமாக
ஏராள அலுவல்கள்.
சிலவற்றை எழுதி வைத்துத்தான் நிறைவேற்ற வேண்டியுள்ளது.
இவை தீர்மானங்கள்!
இது அழகிய காலை.
அற்புத காலை.
எத்தனையோ பேர் காணமுடியாத காலை.
வரம்!
தீர்மானங்களை நிறைவேற்றுவோம் என்பதே இன்றைய தீர்மானமாகட்டுமே!
நான் ரெடி.
நீங்க?
Good morning friends and take good decisions!
A Gladys Stephen decision!
Comments
Post a Comment