என் மன வானில்..

நானோர் கூட்டுப்புழுவாய் பட்டுநெசவாலையில்
செய்யப்பட்ட பாசஜந்து.
தாய் மடி, தந்தை கரம்
தவழ்ந்த அநேகி!
சிப்லிங்ஸ், கஸின்ஸ் கரிசனங்களில் வாழ்ந்த சிறுபறவை.
அன்றிற்சிறகாய் ஆல்விழுதாடிய அன்பாளி!
எல்லாம் தொலைந்து திசைகள் திகைத்து நிற்கையில்,
நான் வெறுமைச்சுமந்து நிற்கும் மெய்யாகின்றேன்.
எழுதலும், நடத்தலும், சமைத்தலும், உழைத்தலும், திரும்பலுமாய்...
உயிர்மெய்பயணமாய் பொய்க்காயம் சுமக்கின்றேன்.
நினைவுச்சுழலடிக்கும் ஞாபககிட்டங்கிகளை
வெறித்துப்பார்த்த விபத்துகளின் தொடர்ச்சியால் என்னைத்தொலைத்து நானே தேடுகின்றேன்.
என் பெயரை மறந்தே நாளாச்சு. என்மனவானின் மாலையே
தூக்கம் கொடு.
ஒரு நல்ல மாலையின் வாய்ப்புகள் கிட்டாதே போயிருந்தால்,
வானம் பார்த்த என் பெயர்பாறையை நான்சுமந்திருப்பேன் .
மாலையே வா மங்கைக்குள் வா.
மயக்கங்கள் தீர்த்து மயக்க வா!
என்மனவானில் தோன்ற வா!
Gladys Stephen evening wreath!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.