தினந்தோறும்...


🏇 🏇 🏇 🏇 🏇

தினந்தோறும் நானெழுதும்                         திருவாசகம் உனக்கே.
ஓ மனமே!

எனக்கான என் பிரார்த்தனை.
எனக்குள் என் பிராத்தனை.

உருகாயோ நெஞ்சமே,
உருகாயோ நெஞ்சமே.

காலையாம் போதிமரம் தானனுப்பும் நானவரம் அருகாதோ நெஞ்சமே
ஓ நெஞ்சமே.

வாழலாம் பூ வனத்தின் தஞ்சமே
என் நெஞ்சமே.
வாழலின் வலிகள் தாண்டி நான் நடத்தும் யாகங்கள் அசுவமேதம்.

என் தடங்களை நானே வெல்வேன்.
என் வெற்றியை நானே நாட்டுவேன்.

தடுப்பார் யாருமற்ற தறுதலையன்று
என் மனக்குதிரை.
என் வழியில் நான் செல்லும் தேர்ந்தவழி, நேர் வழி அதுவே என் நெறிவழி.

வாழலின் வரம்புகள் எனக்கும் தெரியும்.
அதை வாழ்ந்து ஜெயிக்கும் அறங்களும் புரியும்.
ஓ மனமே!

A Gladys Stephen தவக்காலை!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.