காலைகள் எனும் கருணை.
🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡
காலைகள் எனும் கருணை
கண்டிடுவீர் தினமும்.
வாழலின் வழிகள் எல்லாம்
வந்திடுமே தினமும்.
ஒரு நல்ல காலை மிக
நல்ல நாளின் ஆரம்பம்.
ஒரு நல்ல காலை
பாதி முடிந்த மிகச்சிறந்த நாள்.
ஆதலினாற் காலை செய்வீர்.
நற் காலை செய்வீர்.
பிராத்தனையோ, ஜெபமோ,
பூஜையோ, புனஸ்காரமோ,
தியானமோ, யோகமோ,
ஏதோ ஒரு உள்மனப்பயிற்சியில் காலையைக் காண்க!
ஒரு மந்திரச்சொல்லில்
மக்கள் கூட்டம் மாக்களாய்
மன்னர் முன்னே.
ஒரு சுந்தரச்சொல்லில் சொக்கிப்போவதே மானுட மயக்கம்.
வார்த்தையில் வாழ்க்கை,
வாழ்க்கை வார்த்தையில்.
நல்வார்த்தைகள் பகிர்க.
நாளும் பகிர்க.
ஒவ்வொரு வார்த்தையிலும்
பிராத்தனை ஒளிந்துள்ளது.
ஒவ்வொரு பிராத்தனையிலும் ஒரு நிச்சயம் மறைந்துள்ளது.
இந்த நாள் நமது நாள் .இனிய நாள் என மறக்காமல் வாழ்த்துவது
A Gladys Stephen Good Morning!
Comments
Post a Comment