மாலையிலும் கூட இரு..
💞💞💞💞💞💞💞💞💞
காலைகளில் கூடவே எழுகின்றாய்.
மாலைகளில் காணாமற் போகின்றாய்.
கரம் நெகிழ விடாத அன்பே இடையிடையே எங்கே செல்கின்றாய்?
வார்த்தைகள் தேவைப்படும் பொழுது மௌனமாகின்றாய்.
தேவையற்ற தருணங்களில் வாயாடியாகி,
வார்த்தைச்சிலம்பம் கட்டுகின்றாய்.
எது எப்பொழுது தேவையோ அதை அப்பொழுது செய்வதே இலக்கணம்.
இலட்சணம்!
உணரலுக்கான ஏக்கங்களின் பொழுது உளறல்களை நியாயப்படுத்தாதே.
திடுப்பெனத்திமிரும் கண்ணீரால் திருப்திப்படுத்த நினைக்காதே.
நானேவோர் கண்ணீர்தடாகம். சோகசாகரங்களின் சாகசப்பயணி
என் மனம்.
அன்பென்பதில் நிறைய ஞாபகங்களும் வேண்டும்.
நேச மறதிக்கெல்லாம் ஆகச்சிறந்த தண்டனை இன்னமும் நேசித்தலே.
இன்னமும் நேசிக்கின்றேன்.
இங்கனமே நேசித்திரு!
ஏனெனில்,
நேசம் மரணம் போலும் வலியது!
கொன்று தின்னும் உன் அன்புப்பசியில் நீயே உணவு! நீயே உண்பவள்!
மாலையெனும் தோழியே
மாலையிலும் வா ...
( பெயரில் இல்லையடி பொழுதே.
என் துயரில் உள்ளதடீ கழுதே 😂).
A Gladys Stephen evening song on the soul !
Comments
Post a Comment