நதிபோலே நான்

🌊🌊🌊🌊🌊🌊🌊

அடித்துச்செல்லும் திசையெங்கும்
என் பயணம்.
அகன்றதோ, குறுகியதோ அதன் போக்கில் என் பயணம்.

தடைகள் தாண்டி தயங்காது
செல் பயணம்.
தானாய் தாவித்திரியும் காட்டாறாய்
என் பயணம்.

முயன்று நான் சென்றெதெலாம் முன்னொரு காலம்.
முட்டச்செல்லும், முந்திச்செல்லும்
என் பயணம்.

காலம் போகும் போக்கில்
என் கடன்பயணம்.
கடமைகளாய், நான் போகும் காட்டுப்பயணம்.

தடாகத் தடைகள் தாண்டி
என் பயணம்.
சோகம் சுகமற்ற சுழல் பயணம்.
சொந்தங்கள் பந்தங்களற்ற தனிப்பயணம்.

நிலவாய், மீனாய் தனிப்பயணம்.
நிலவும் நிகழ்வுகளில் நிதம் பயணம்.
யாரும் தேடா என் பயணம்.
எனக்கே எனக்கான என் பயணம்.

களங்கமற்ற என் வாழ்வில்
கடந்து சென்ற களப்பயணம்.
கானல் நீராய் தீவிரித்த
காற்றுப்பயணம்.

சொல் பயணம், ஸ்வரப்பயணம், நேசமாம் கனவுகளின் யுகப்பிரளயம்.
கண்ணீர்தடம் காய்ந்த கற்பயணம். இரவிலும் பகலிலும் இதே பயணம்.

நில்லாமல் செல்லும் நதி நான். துணைதேடா செல்
பயணம் என் பயணம்.
வழித்துணைகள் தேடா துணிவுப்பயணம்.

நான் நதி.

A Gladys Stephen brook!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.