ஞாயிறுகள் முடிவதில்லை.

ஞாயிறுகள் புதிது.
உடலாலும் மனதாலும்
ஞாயிறுகள் புதிது.
ஒரு தீக்கோளமாய் மானுட புரிதலென்றாலும்,
நீ இல்லாது போனாலேது
மானுட குடும்பம்?,
வாழ்வெனும் அரங்கம்?
இயற்கையெனச்சொன்னாலும் இறைவனென நின்றாலும்,
மானுட நகர்வே உன் நகர்வில்தான்.
உன் நகர்வினுக்காய்
இன்று நிற்கின்றோம்.
வாழலின் ஓய்விற்காய்,
ஞாயிறிலேயே ஓய்கின்றோம்.
தொழுதார்க்கு தொழுகை,
ஓய்ந்தார்க்கு ஓய்வு.
ஞாயிறாம் நன்னாளில்-இந்நாளில்.
மானுடம் தொழுவோம்.
ஞாயிறு போற்றி,
ஞாயிறில் வாழும் நாமும் போற்றி.
புதிதான ஞாயிறில் புதிதாவோம்.
ஒவ்வோர் வாரமும் புதிதே.
ஞாயிறு வாழ்த்துகள்!
Gladys Stephen Sunday wishes!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.