தேடினேன்...
💗💗💗💗💗
உயிருக்குள் கொலுவைத்த
கோபுர வாசலைத்தேடினேன்.
நெஞ்சுக்குள் நிதம் தொழும் நினைவைத்தேடினேன்.
வாசம் வீசிய
வாடாமல்லியைத் தேடினேன்.
வசந்த கிளைகளில்
பன்னீராய் மணந்த பைங்கிளிப் பேழையைத்தேடினேன்.
ஒரு ராகமாலிகைப்பாடி
எந்தன் செவிக்குள் சிந்தைக்குள் சிற்பமாய் உறைந்துவிட்ட சீரன்பைத்தேடினேன்.
உள்ளிருக்கும் விம்மலின் அடையாளங்கள் வெப்றாளமாய் மாறுமுன்னர் ஒரு தென்றலாய் தீண்டாதோவெனத் தேம்பினேன்.
இதயம் தொலைத்த ஆத்மாக்களுக்கெல்லாம்
அவை தொலைந்தயிடமே கருவறை.
மீண்டும், மீண்டும் மீண்டு
பிறக்கவே ஞாபகங்கள்.
மாலைகூட்டாத வேதனைக்காய் மாலையே, மாலையில் மாலையிடு மனசேரு.
மனம் சேரு !
A Gladys Stephen evening monologue!
Comments
Post a Comment