எழுக!


👩‍💼👩‍💼👩‍💼
ஒரு சுந்தர மந்திரம்.
எழுக👩‍💼!
வீழலற்ற மானுடம் இல்லை.
வீழ்ந்து கிடப்பதே மானுடம்
என்றும் இல்லை.
எழுக!
அது காலை எழும்புதல் மட்டுமன்று.
கடமைகளின் நிறைவேற்றலுக்கான எழும்புதல்.
நிறைவேற்றாமல்
விட்டவைகளுக்கான எழுதல்.
வார்த்தை நிறைவேற்றலுக்கான எழுதல்.
எழுக!
பகலவன் எழுந்தாயிற்று,
பறவைகள் எழுந்தாயிற்று, பல்லுயிரினங்கள் எழுந்தாயிற்று
பல வகை எண்ணங்கள் எழுந்தாயிற்று.
நிறைவேற்ற எழுக!
எழுமின் விழுமின்!
எழுக!
இன்று நமது நாள்!
கட்டிய பூச்சரமும் காத்திருக்கு,
கூந்தலில் சூட காத்திருக்கு!
எழுக!
Gladys Stephen wake up call!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.