அருகினில் மாலை...


🌛🌛🌛🌛🌛🌛🌛🌛

அருகினில் மாலை,
அணிந்திடும் சோலை.
நெருங்கிடும் வேளை,
நிலவுக்கு வேலை.

மங்கிடும் சூரியன்,
மின்னிடும் தாரகை.
நிலமிடம் போர்வை,
நிலவிடம் விளக்கு.

நலமுடன் வாழ
மாலைகள் அவசியம்.
நம்முடன் வாழும்
மாலைகள் வேண்டும்.

நாமாய் மாறிட
நாளது வேண்டும்.
நாளும், பொழுதும்
நலமது வேண்டும்.

தேனில் ஊறும்
நிலவதும் வேண்டும்.
தீயில் நிலைத்திடும்
பகலதும் வேண்டும்.

இரவும்-பகலும்
இணைந்தே வேண்டும்.
இணைந்தே இணையாதே
இரண்டும் வேண்டும்.

ஆயுள் முழுவதும்
ஆண்டிட வேண்டும்.
அன்பும், அறனும்
கொண்டிட வேண்டும்.

காணும் பொழுதெலாம்
கவிதைகள் வேண்டும்.
வாழும் விழுதெலாம்
நினைவெனும் ஊஞ்சலும் வேண்டும்.

மாலையெனும் மங்கையின்  மயக்கங்கள் காலை வரை தொடரட்டும்.

விடியெலாம் வெள்ளியில்
அவள் விழிகளே உதிக்கட்டும்.   

விழிகளில் விழிக்கட்டும்.

A Gladys Stephen evening melody!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.