கண்ணுக்குள்...கண்ணுக்குள்
..
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
கண்ணுக்குள் உன்னை வைத்து, கார்குழலாம் பெண்ணே,
கார்மேக மாலைப்பெண்ணே,
உன்னை வைத்து காத்திருந்தேன் கண்ணே கண்மணியே,
மாலையாம் தோட்டத்தில்
நீ தானே மரிக்கொழுந்து,
மணம்வீசும் வாசப்பூவு.
நேசமாம் நெஞ்சணையில்
வசிப்பவளே,
பாசாமாம் பல்லக்கில்
வருபவளே,
உசுருக்குள் உசுராகி,
உனையேதான் நினைப்பாக்கி உன்மத்தமாகின்றேனடி,
உள்ளேயே உறஞ்சு போயேண்டி,
நெஞ்சுருகி நின்றவளே, நெனப்பெல்லாம் பூத்தவளே, நெடுவாசக்கதவாட்டம்
நெனப்பாகி நின்னவளே,
தொட்டாலே பூ மலரும்
தொடாதே நீ மலர்வாய்.
நேசமாம் அன்பினில்,
பாசமாம் காதலில்,
மாலையாம் மாலையில்
மாவிளக்கு வெளிச்சத்தில்
மடிதவழ நீ வாயேன்.
பூ மாலையே புவி சேரவா!
A Gladys Stephen evening wishes!
Comments
Post a Comment