காலை வணங்கி...


🙏🙏🙏🙏🙏🙏🙏

காலை வணங்குகின்றேன்.
காலையை வணங்குகின்றேன்.

வாழலாம் வாழ்விற்கு
வரவேற்பாம் காலைக்கு
காலை வணங்குகின்றேன்.

நாமெலாம் சமுதாய உயிரினங்கள்.
கூடி வாழ்ந்திடும் உயிரினங்கள்.

துறவற்ற அறம் நமது.
வாழலே நம் அறம்.

நீர் சூழ் பூவுலகிலும்
தாமரைத் தவம் நாம்
தினசரி பயணம்.

நில்லாது செல்லும்
கடிகாரவோட்டம் நம் வாழ்க்கை.

என்னன்னவோ நடந்தாலும்
எப்பொழுதும் நம் பயணம்
நில்லாது செல்லும்.

காலையைத்தொழுதலும்,
காலையிற் தொழுதலும்
சாலச்சிறந்ததாம்.

தொழுகை பற்றிய
உடன்பாடுகளற்ற நிலையில்,
சக உயிர் வாழ்த்தி,
காலை வணங்குகின்றேன்.

பயணங்கள் தொடரட்டும்!
கடமைகள் வெல்லட்டும்!

A Gladys Stephen Good Morning wish
to all the friends seen and unseen!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.