ஓய்தலெனும் தலையணை மாலை.
அக்கடாவென ஓய்ந்து
சாய்கையில்,
தலையணை ஓர்
அரும்பெரும் ஆறுதல்.
மாலையெனும் தலையணையில் மடியெனச்சாய்கின்றேன்.
மனசெல்லாம் மடிவானாலும்
தாயாய் மாலை.
இதமான காற்றாய்,
மதிய வெயிலுக்கு
ஆறுதல் கதைகள் பேசி
கண்மூட வைக்கும்
பாசமொழிப்பேச்சு
என் தலையணை ஸ்பரிஸம்.
தொடு வானிற் நிலவு தோன்ற,
விண்மீன்கள் கண்சிமிட்ட
மெல்ல விழிக்கும் விழிதனில்,
அந்தி வரும் நேரம்.
மென்காற்று, உடலும்-மனதும் இதமாகின்றது.
ஓய்ந்தது போதும் Gladys Stephen
என எனக்குள் நான்
சொல்லும் எழுப்புதற் கீதத்தில்
சோம்பற் முறிக்கின்றேன்.
"பூ மாலையே தோள் சேரவா",
பாடலும் எங்கோ தொலைவில்.
புது மாலையும் அருகில் தொடுவானிற்!
A Gladys Stephen rejuvenating evening!
Comments
Post a Comment