சொல் சொலல்.
உள்ளுக்குள் பேசும்
பேசாத பேச்சுக்களை
இரவுகளில் நிறைய
புதைத்திருப்போம்.
வாசிக்கப்படாத கடுதாசிகள்,
கடுப்பேற்றும் மின் பிம்பங்கள்.
சிரிப்புவராத மீம்ஸ்,
பல்ஸ் பார்க்கும் ஸ்மைலீஸ்.
அறிவார்ந்ததாய் காட்டமுனைந்து
தோற்றுப் போகும்
கடுப்பேற்றும் கமண்ட்ஸ்.
பேசாத பேச்சுக்களை
இரவுகளில் நிறைய
புதைத்திருப்போம்.
வாசிக்கப்படாத கடுதாசிகள்,
கடுப்பேற்றும் மின் பிம்பங்கள்.
சிரிப்புவராத மீம்ஸ்,
பல்ஸ் பார்க்கும் ஸ்மைலீஸ்.
அறிவார்ந்ததாய் காட்டமுனைந்து
தோற்றுப் போகும்
கடுப்பேற்றும் கமண்ட்ஸ்.
நச்சரிக்கும் எச்செரிச்சல்கள்.
நிறைய அன்பின் நிற்காத வார்தையனுப்பல்கள்.
தூக்கம்கேட்கும் விழித்திரைகள் இவற்றையும் தாண்டி, ஒரு தூக்கமாத்திரைத்தொந்தரவாய்
துரத்தும் அரூப வௌவால்கள். பெயர்தெரியா அமானுஷ்யங்களின் காட்சிப்பிழைகள், தோன்றும் பிழைகள்.

இவை தாண்டியும் இரவுகள் நம்மை குணப்படுத்தியிருக்கின்றன.
இந்த நிர்மலமான புதிது.
துளிரிலைப்புதிது.
பிறந்தகுழந்தையின்
பாத மெலிசாட்டம் புதிது.
துளிரிலைப்புதிது.
பிறந்தகுழந்தையின்
பாத மெலிசாட்டம் புதிது.
இன்னொரு காலை.
இன்னொரு சொர்க்கம்!
இன்னொரு சொர்க்கம்!
காலையின் கதவுகள் திறந்தாயிற்று.
கற்பனைக்கெட்டாத இந்த காந்தர்வக்காலைக்காய் காத்திருப்பின் காண்டமிசைப்போம்.
கற்பனைக்கெட்டாத இந்த காந்தர்வக்காலைக்காய் காத்திருப்பின் காண்டமிசைப்போம்.
காவியக்காலையின் காப்பிய மாந்தராவோம்.
சொல் சொல்லலிலும், சொல் சொலலுமே வாழ்க்கை!
நாம் சொல்லலா?
சொலலா?
சொலலா?
விடைகளோடேயே
விடிகின்றது காலைகள்.
விடிகின்றது காலைகள்.
வாழும் வாழ்த்துகள்!
A Gladys Stephen word!
Comments
Post a Comment