ஓய்தற் பொருட்டு....

ஓய்தற் பொருட்டு ஓய்ந்தேன்.
ஆனாலும் ஓய்வில்லை.
மனம் ஓயவில்லை.
நாளைய தினமதின் ஞாபகங்கள் மரிப்பதில்லை.
இந்த மாலையும் இரவாகும்.
இமைகளின் உள்ளேயும் விழித்திருப்பேன்.
தொடரும் காலையில் தொடராவேன்.
தொடரலாவேன்.
ஓய்வற்று என் வானின் சிறகாவேன்.
ஓயாத கவிதைகளின் வலமாவேன்.
வாய்விரித்துறங்கும் அயர்வுகளின் முடிவாவேன்.
அங்கிங்கெனாத, எங்கெங்குமுங்கள் இதமாவேன், இதயமாவேன்.
ஞாயிறாம் மாலையில் நானாகி, நாமாகி,
நீயாகி, நீங்களான, எல்லோர்க்கும் எல்லாமானேன்.
வார்த்தைகளில் வராத வாழ்க்கையின் வாழ்த்துகள் ஆகின்றேன்.
Have a nice evening.
A Gladys Stephen evening wish!


Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.