தூரம் அதிகமில்லை.

வாழ்க்கை அழகானது.
கடந்து வரும் பாதைகளின்
காட்சிகள் அழகாயினும்,
தாண்டி வந்த தடைக்கற்களை நினைத்துப்பார்த்தால் நெஞ்சம் வலிக்கத்தான் செய்கின்றது.
வாழ்க்கை அழகானது.
ஒவ்வொரு பகலின்
பிரயத்தனத்திலும்
சேர்த்து வைத்த கனவுகளை
அடைகாத்து பிரசவிக்கும் அதிகாலையெனும்
தாய்மனதாலேயே
மறுபடியும், மறுபடியும் பிறக்கின்றோம்.
வாழ்க்கை அழகானது.
நேற்றின் வீழலை முகம் பார்த்து விட்டு இன்று எழுகின்றோம்.
கவலைக்கிடமான நம்பிக்கையை தட்டி எழுப்புவதே காலையின் வேலை.
வாழ்க்கை அழகானது.
முடியும்.
நம்மால் முடியும்.
நம்புங்கள்.
வாழ்க்கை அழகானது.
இந்த நாளை பயனுள்ளதாக்குவோம்.
ஏனெனில் தூரங்கள்
எப்பொழுதும் அதிகமில்லை.
நம் முதல் அடியே முற்றும் அடி !
வெளியே வா மனமே.
வானம் பார்.
வானும் தூரமில்லை.
வாழ்க்கை அழகானது.
Gladys Stephen hopeful morning!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.