அந்தி வரும் நேரம்.

அந்தி வரும் நேரம்,
சில சம்பவங்கள் ஆடும். 
பல சம்பவர்கள் தேடும்.
தோளிலிட்டு தாங்கிய தந்தை, தூளியிலிட்டு ஏந்திய தாய்,
உடன் வளர்ந்த உயிர்கள்...
இதையும் தாண்டிய
முதல் நண்பர்கள்,
முதற் கனவு,
முதல் விழித்தேடல்,
முதல் இதயப்பட்டாம் பூச்சி,
முதல் படபடப்பு,
முதல் கதறல்,
முதல் காதல்,
முதல் கடிதம்,
முதல் கண்ணாமூச்சி,
முதல் கவிதை,
முதல் கல்லறை!
நிறைய முதற்களில்
ஞாபகங்கள் புதைந்து கிடக்கின்றது.
சன்னலோரம் அகன்று செல்லும் காட்சிப்படிமங்களின் கோர்வையில் ஒவ்வொரு நாளும் ஓராயிரம் சுயசரிதைச்சரிவுகள்.
தோள்தாங்கும் சுமைகளைச்சுமப்பவை இம்மீள் நினைவுகள்.
மீளாத்துயில் ஓர் நாள் வரும் வரை மீள் நினைவுகள் துயிலாது!
ஆயினும்,
நினைவுகளிலேயே
வாழ்ந்திடவியலாது .
பேருந்து நிற்கும் பொழுது
பெரு மூச்சு புறப்படும்.
அதின் விழி மூடலில்,
ஓராயிரம் கனவுகளின்
பயணங்கள் ஆரம்பமாகியிருக்கும்.
ஒரு நல்ல காஃபி குடிக்கணும்.
காஃபி வித் Gladys ன் அறிவிப்போடு
அது முடியவில்லை yet to come.
Gladys Stephen coffee time!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.