பறக்கவே தோன்றும்
சிறகுகள் அற்ற சிறு குழந்தையாகின்றேன்.
குதூகல வானின் பறப்பாகின்றேன்.
வானம் தொடும் விருப்பாகின்றேன்.
ஒவ்வோர் காலையும் ஓர் போதி தவம்.
அழுத்தும் நினைவுகள் துரத்தும் அறப்போர்முறம்.
புத்துணர்வெனும் காஃபியருந்தி, புதுப்பாடல் கொண்டு பறக்கவே தோன்றும் பகல் பறவை என் கண்கள்.
மனோவேகத்திசையெங்கும் என் நினைவுச்சிறகுகளின் நீள் பயணம்.
காற்றாவேன்,
சிறகாவேன்,
கார் முகிலின் துளியாவேன்.
சுடராவேன்,
சுகமாவேன்,
சுற்றி வரும் தேருக்கு வலமாவேன்.
தொடா வானெல்லாம் தொட்டுவரும் பறப்பாவேன்.
சிறகை விரித்துப்பற வானம் வசப்படும்.
A Gladys Stephen limitless morning edition !
Comments
Post a Comment