ஏகாந்தம்...
🧘🧘🧘🧘
எப்பொழுதும் கூட்டத்தில் தனியே.
முப்பொழுதும் தோற்றத்தில் தனியே.
எண்ணத்தில், வண்ணத்தில் தனியே.
கூட்டத்தில் நிற்பதாய்
காட்டிக் கொண்டாலும்.
குதூகலத்திலும் துணை நிற்பதாய் சிரித்துக் கொண்டாலும்.
எப்பொழுதும் கூட்டத்தில் தனியே.
சிரிப்பின் உள்ளேயும் கண்ணீர்.
கவிதைக்குள்ளும் உரைநடை.
குறுவாள் உருவி யுத்த
முத்தம் செய்கையிலும்.
புத்தமௌனங்கள்.
எல்லோரிலும் நானானலும்
யாரிலுமில்லை நான்.
அன்பாம் வார்த்தைகள் கோர்த்து காவியச்சரம் பேசும்
எல்லா இலக்கியத்திலும் நானோர் முரண்பிழைத்த நயம்.
தனித்திருக்கும் ஒவ்வோர் ஆத்மாவின் தனிமையிலும் நானோர் துணைத்தனிமை.
கூட இருக்கும் பிரிவு.
சிரித்திருக்கும் கேவல்.
முரண்பாட்டு மூட்டை சுமக்கும்
இலவம்பஞ்சுத்தளிர்.
அன்பாயி கொள்ளும் சினமெலாம் ரகசியக்கண்ணீரில் கரைந்துருகையில்,
வானும் நானும் தனித்திருப்போம்.
வான் தனியே.
நானும் தனியே!
A Gladys Stephen evening soliloquy!
Good evening!
Comments
Post a Comment