விரையும் நேரம்.

எப்படி விரைகின்றதெனத் தெரியாத நேரம்.
கைபேசிக்கடிகார அன்பழைப்பில் வேறுவழியின்றி எழும்பினால் துரத்தும் கடமைகள்.

விலங்குச்செயல்களை மனிதச்செயல்களாக்கும் நாகரீக வசதிகள்.

உடலையும் மனதையும் உரமேற்றும் ஒரு சில அசைவுகள்.
ஒரு காலை வணக்க கைபேசியதிர்வு. நேற்றில் விடை பெற்ற வார்த்தைகளின் நீட்சி.

நானே நானென்பதை ஞாபகப்படுத்தும் உள்ளார் சிஸ்டம் சாஃப்ட்வேர்கள்.
பேக்கேஜஸ். 

சமையல், சலவைச்சேலை, உறுத்தாத ஒப்பனை, உள்ளார் பிராத்தனை மற்றும் உரியவருக்கான அட்டென்டஸ் மார்னிங்.

உயிருக்கு உயிரிருப்பதை உணர்த்தும் ஆன்ட்ராய்ட் அனுப்பல்கள் குரல் கரிசனங்கள்.

விரைந்த சாப்பாடு.
விரட்டும் லஞ்ச்பாக்ஸ்.

நடத்துனர் முகம் சுழிக்காதிருக்க சில்லறை. பாரம் சுமக்கும் பரிதாபச்செருப்பு.

காத்திருக்கும் சக பயணிகள்.
வாழ்த்தும் வானம், வரவேற்கும் சூரியன்.

இதன் நடுவிலும் உங்கள் கரம் தேடி நான் நெகிழவிடும் இந்த முகநூல் வாழ்த்தில் விரையும் நேரமே சற்று நின்று போகின்றது.

ஏனெனில், வாழ்த்தென்பது பிரார்த்தனை!

எல்லாம் நலமாய் நிகழ வாழ்த்துகின்றேன்!

A Gladys Stephen morning post!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.