நானும், கரும்பும், எறும்பும்





🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜
கரும்புக்காட்டு கள்ளியானேன்.
திருடியானாதான் கள்ளியா?
திகட்ட, திகட்ட உள்ளம் கொள்ளை கொள்ள தின்பவளும் கள்ளியே.
சக்கையைக்கூட எறும்புகள்🐜🐜🐜 விரும்பாதபடி இனிப்பெல்லாம் சவைத்துப் பிழிந்து
சுவைத்து துவைத்த நான் கரும்புக்காட்டுக்கள்ளிதானே?
எறும்புக்குல விரோதி தானே?🤷🤷🤷
ரொம்ப நாளுக்கப்புறம்
சவைச்சு, ருசிச்சு, அடிச்சு,
தூள் கிளப்பிட்டேன் போங்க.
தின்னு குவிச்சிட்டேன் போங்க.
விழுங்கினேன் என்பது தான் சரி, அருந்தினேன் என்பதுதான் சரின்னு, நல்ல தமிழ் நக்கீரர்கள் நியாயம் கேக்கப்டாது.
மெய்மறந்து கரும்பை ருசித்தேன்.
வாய் வலிக்கும், நாளைக்கு அறுக்கும், எத பத்தியும் கவலப்படாம
சும்மா புகுந்து விளையாடி விட்டேன்.
அப்படி ஒரு மகிழ்ச்சி, ஆனந்தம்,, பேரானந்தம்.
நானும் பொங்கல் நாட்களின் பிள்ளையானேன்!
நாக்கில் நீர் வடிகின்றதா?🤣
எழுதத் தூண்டிய L.s. Spencer Jayanath அண்ணனுக்கு வணக்கம்!
Gladys Stephen Sugarcane Gala💃💃💃!





Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.