முன்னிரவு..


👁️👁️👁️👁️👁️

மாலை மயங்கிற்று.
இருள் கவிழ்ந்தது.

அழகாய் தோன்றும் வானில், அழகுக்கழகாய் மீன்களும் சந்திரியும்.

வீசாத காற்றாய்
பகலுஷ்ண மிச்சம்.
பக்கத்தில் பாயும் பவானி.

கால்நடந்து சுவடுகள் விட்டு வந்தேன் மாலையில்.
ஒரு சின்ன கர்வம் !

பவானி ஓடுகின்றாள்.

எத்தனை நாளோ தெரியாது.
ஆனாலும், கண்ணீருக்காய் காட்டாறாய் பாய்ந்து வந்த காவேரியை மன்னிக்கலாம்.

தமிழோரே இனியாவது பிளாஸ்டிக் தம்ளரை நீர் நிலைகளில் வீசாதிருப்போமா?

இரவுக்கனவில் கழிவுமேலாண்மைக்கரிசனம் வந்தால் விடியலில் நிறைவேற்றுவோமே !

சூழல் கரிசனத்துடன் A Gladys Stephen Good night !

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.