கலங்காத மாலை
பகல்கள் தரும் பாடங்கள் தவிர்க்க இயலாதவை.
மானுட அமைப்புகளில் சுடும் வார்த்தைகள், சாமாளிப்புகள், ஏளனங்கள் தாண்டி ஏதோ ஓர் மூலையில் அன்பின் கண்கள் அரவணைக்கும்.
சில மொழிகளின் அர்த்தங்கள் நமக்கு புரியாமற் போகலாம்.
ஆயினும் புரியாமலேயே போய்விடாது.
மௌனகுருக்களின் பேசா மொழிகளாலேயே மானுடம் வாழ்கின்றது.
ஒரு நட்பின் குறுந்தகவல், ஒரு இதய ஸ்மைலி இவைகளுக்குள் ஒளிந்திருக்கும் நானும் நீயும் உயிரோடுள்ளோம் என்ற சமிக்கைகள் எந்த மாலையையும் உயிர்ப்பிக்கும்.
மாலைகளில் கலக்கமில்லை கள்ளமிலா நெஞ்சிருப்பின்.
A Gladys Stephen evening vision!
Comments
Post a Comment