நலமா?
🤗🤗🤗
நலம் நலமா?
நேற்றின் துயில் நலமா?
இரவை இனிதாய் தூங்கிப்பெற்ற
நலம் நலமா?
தூக்கமற்றுப்புலம்பும்
மானுடர் நடுவே
தூங்கிச்செரித்த
கனவுகள் நலமா?
சேமித்த ஆரோக்கியம் நலமா?
ஓய்வெடுக்கா இதயம் நலமா?
விழிப்புடன் காக்கும் மூளை நலமா?
எட்டிப்பார்த்த நிலவு நலமா?
தலை தாங்கிய தலையணை நலமா?
நலம் நலமா?
விடியலில் எழுப்பிய
அலராம் நலமா?
எங்கோ கேட்ட
கொக்கரக்கோ நலமா?
சூரிய ஸ்பரிஸம் நலமா?
சுகமா?
விடியல் சுகமா?
Good morning!
மாறி, மாறி வரும் நாட்களின் வேகத்தில் நலம் நலமே என நாமும் கொண்டாட...
A Gladys Stephen Good Morning !
Comments
Post a Comment