காலைக்காவேரி..
♻️♻️♻️♻️♻️♻️♻️
குடகின் குமிழாய் பிறந்து
பவானியை நிரப்பிய
காவேரி கரை புரண்டு ஓடுகின்றாள்.
கண்ணீர் மல்க தண்ணீர் கேட்ட நாட்களைத்தாண்டி,
தண்ணீராலேயே கண்ணீர்.
காய்ந்த பகல்களின்
வயல்களின் நாட்கள் மாறி,
வீடு புகுமோ இரவில் தண்ணீர் எனத்திகைக்க வைக்கும் வெள்ளக்காடு.
வீழலுக்காய் தண்ணீர்
விரைகின்றது நீர் நிலைகளை பாழாக்கும் பாவம் நிற்குமோ?
இந்தக்காலையிலும் சாலையைத்தொட்டு
விட்ட தண்ணீர்!
ஆபத்தில்லை.
ஆனாலும், ஆதங்கமும் இல்லாமவில்லை.
விடியலை பார்க்கின்றேன்.
மானுடம் மாறட்டும்.
மரமும்-மழையும்
இணைபிரியாதவை.
கேரள விபரீதம்
மரம் வெட்டியதால் என்கின்றனர்.
தமிழக விபரீதங்களுக்கு
மரம் வளர்த்து மழைவருவிக்காததும் என்கின்றார்கள்.
குப்பையாக்கும் குளங்களையும், அசிங்கப்படுத்தும் ஆறுகளையும் அழகாக்குமா தமிழ் மனம்?
இந்தக்காலையில் இது வாழ்த்துக்கேள்வியாய் கேவுகின்றது.
கேட்கின்றதா?
A Gladys Stephen questionable morning!
Comments
Post a Comment