கருப்பு பக்கி

🦋🦋🦋🦋🦋

இன்னமும் ஞாபகமிருக்கின்றது.
கரும்பக்கி நாட்கள்.
ஹெலிகாப்டர் புட்டான் நாட்கள்.
தீப்பெட்டி பொன்வண்டு நாட்கள்.

வசந்தம் வாழ்ந்த அழகிய நாட்கள்.
சிறுமிக்கும் பெரியமனுஷிக்கும் நடுவில் என்னை சுற்றி வந்த வண்ணத்துப்பூச்சி நாட்கள்!

மூச்சிரைக்க பின் தொடர்ந்த கண்களில் இருந்த படபடப்புகளின் வடிவை கையில் ஒட்டும் கறுப்புச்சிறகுகளில் பார்த்த நாட்கள்.

அப்படியே உறைந்திருக்கலாகாதாவென ஏங்கும் நேற்றின் ஞாபகங்களுக்கு நானும் மானசீக சிறைவாசிதான்.

என்னையும் சுமந்து செல்லும் சிறகுகளின் பயணம் கல்லூரிச்சன்னலில் வந்தமர்ந்த பொழுது
மனசுக்குள் பள்ளி நாட்கள்!
பால்ய நாட்கள்.
சிநேகிதங்கள்.
சிதிலங்கள் தாண்டிய சிறகடிப்புகள்.

மனம் இந்த மாலையில் லேசாகி போகின்றது.
ஒரு நந்தவனத்தேராட்டம் என் நினைவைச்சுமந்து செல்கின்றது இந்த பட்டாம் பூச்சி!

உங்களை?

A Gladys Stephen butterfly days!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.