ஓயாத சுதந்திரம்...
💃💃💃💃💃💃💃
கொண்டாட்டம் முடிஞ்சாச்சா?
கொடியெல்லாம் இறக்கியாச்சா?
வயிறு புடைக்க தின்றாச்சா?
தொண்டை விக்க குடிச்சாச்சா?
குறட்ட விட்டு தூங்கியாச்சா?
துன்னதெல்லாம் செறிச்சாச்சா?
சுதந்திரம் முடிஞ்சாச்சா?
ஃ........................................................ஃ
சுதந்திரம் என்பது ஒரு சம்பவமன்று.
ஒரு கூட்டம் தேசிய இனங்களின்
ஒரு ஏகதேச ஒப்பந்தம்.
உத்தேச போர் நிறுத்தம்.
உள் போர் குமுறல்களோடு
ஏகப்பட்ட வருத்தங்கள்.
ஆயினும்...
இந்த தேசம் ஒன்றுபட்டதே.
இந்த உணர்வில் ...
ஓடி வரும் காவேரியின் ஜீவனை பவானியாற்றில் பார்த்தேன்.
சுதந்திர தியாகங்கள் கண் முன் வழிந்தோடுவதை ஆனந்தக்கண்ணீரோடு பார்த்தேன்.
A Gladys Stephen national day evening wishes !
Comments
Post a Comment