காலைத்தென்றல்..
🌤️🌤️🌤️🌤️🌤️🌤️🌤️
இதமாய் வீசும் தென்றலின்
சுகத்தோடு இனிய காலை.
இதயம் மகிழும் அழகிய காலை.
பனி விலகி பகலவன் எழுகின்ற பரிசுத்த காலை.
கவலைகள் தீர்த்திடும் கனிவுடன் காலை.
ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு காலை.
ஓவியச்சிறப்பாய் ஓங்கு கலைக்காலை.
ஆன்மாவின் பாடலாய் ஆருயிர் காலை.
அகத்தினொளியாய் அற்புதக்காலை.
சுத்த வானாய் சுகந்தரும் காலை. சுகங்கள் தேடியே தீண்டிடும் காலை.
ஜீவனை இயக்கும் சிறப்பே காலை. சிந்தனை தெளிந்த சிறந்த காலை.
மங்கள காலை, மன்னுயிர் காலை. மாநிலம் தனிலோர் மரகதக் காலை.
மன்னுமுயிர்க்கெலாம் மற்றுமோர் காலை.
உற்றதுணை, உயிர் துணை எல்லோர்க்கும் உன்னத காலை.
வாழும் உயிர்க்கெலாம் வந்தனக்காலை.
ஏழை பாழை எல்லோர்க்குமாய்
ஏற்ற காலை.
அழகிய காலை வணக்கம்!
A Gladys Stephen Good Morning song!
Comments
Post a Comment