எப்பொழுதும்...
🌟🌟🌟🌟🌟🌟
எப்பொழுதும்
புத்துணர்வாய்,
எங்கெங்கும்
சுதந்திரமாய்,
முப்பொழுதும்
சந்தோஷமாய்,
இப்பொழுதே
வாழ்ந்து விடு.
இப்பொழுதை வாழ்ந்து விடு.
திரும்ப திரும்ப
சுழன்றடிக்கும் சுழலாய்
வாழ்வுச்சுழல்.
பருவகால மாற்றங்கள்.
மனிதமனவேற்றுகள்.
உடலார் உபத்திரவங்கள்.
உள்ளார் உறுத்தல்கள்.
தேடல்கள்.
தேம்பல்கள்.
தேற்றல்கள்.
தொலைந்த மேகங்கள்.
தொலையாத கானங்கள்.
காய்ந்த காயங்கள்.
அகலாத வடுக்கள்.
உலகார் வாழ்வில்
உழன்று தவிக்கின்ற
மானுடர்காள், மானுடர்காள்.
வாழல் நன்று, வாழல் நன்று.
வானுறை தெய்வம்
செல்வோமோ என்னமோ
வாழ்வாங்கு வாழல் நன்று.
வாழும் வரை வாழலே நன்று,
வாழ்வே நன்று.
அதை இன்று நின்று
கண்டு கொண்டாடு மனமே,
ஓ.. மனமே.
A Gladys Stephen Sunday sacrament!
Comments
Post a Comment