தண்ணீர் தடையுடை...
🗺️🗺️🗺️🗺️🗺️🗺️🗺️🗺️🗺️
தண்ணீர் ஒரு தடையல்ல.
தண்ணீரை தடுத்த தடைகளே தடை.
அதையுடை தமிழினமே.
உனக்கில்லா ஆறுகளா,
குளங்களா, ஏரிகளா, கடலா?
குப்பைகளால், கொட்டி, கொட்டி தண்ணீரடைத்தாயே,
நன்னீரடைத்தாயே.
காவிரியெப்படி பயணிப்பாள்,
பவானி எப்படி புறப்படுவாள்?
ஆங்காங்கே கொட்டி வைத்த குப்பைகளை, ஆசையாய்
சப்பியெறிந்த பாட்டில்களை
ஆங்காங்கே வீசி விட்டு,
ஐயகோ என புலம்பி நின்றால்,
ஆருக்கு என்ன பயன்?
ஆறாத காயங்களுடனயே
அத்தனை ஆறுகளும்
ஆற்றாமையுடன் ஓடுகின்றன.
ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்துவிட்டு, அங்கேயே வீட்டையும் கட்டிவிட்டு,
அரசை நொந்து ஆவதென்ன அண்ணாச்சி?
இனியாவது திருந்துவோமா?
நீர் நிலைகளைக்காப்போமா?
குறைந்த விலைக்கு ஆசைப்பட்டு குளக்கரையை மூடிவிட்டு,
வீட்டையும் தான் கட்டிபுட்டு,
குய்யோ , முய்யோன்னு அழுதுபுட்டு...
பேராசை பெரு நஷ்டம்.
பொதுநலன் கருதி காலை வணக்கத்துடன் வெளியிடுவது
Gladys Stephen.
Comments
Post a Comment