ஆலயத்தினுள், கணீரென்ற குரல் ‘சத்தாய் நிஷ்க்களமாய்’ சுவர்களில் பட்டுத்தெரித்தது.... குரலின் சொந்தக்காரனை தேடியது கண்கள்... பாடிக்கொண்டே பீடத்தின் முன் நின்றான் வெள்ளையங்கியினுள் என் தமிழன்... திருத்திய சிகை, சுருண்ட முடி, நேர்த்தியான புருவம், அடர்த்தியான மீசை, காதல் வழியும் கண்கள், செதுக்கிய மூக்கு, திறந்த செவிகள், உண்மையை உரைக்கும் உதடுகள். தமிழ் இத்தனை அழகா! என புரியவைத்த அழகன். சிந்தனையில் தெளிவு, வாயின் வார்த்தைகளில் தெரிந்தது. கருத்து சுதந்திரம் தற்ப்போது புரிந்தது. தோற்றத்தில் கம்பீரம் எப்போதும் தொடர்ந்தது. நிற்கும் போதும், நடக்கும் போதும், அமரும் போதும், பேசும் போதும். வெள்ளை நிறம் உன்னால் சிறப்பு பெற்றது. கருத்தும், சிந்தனையும் ஒவ்வொன்றும் அழகு, உன்னைப்போலவே. பேச்சினால் கூட்டத்தைக்கட்டுப்படுத்துவதை படித்திருக்கிறேன். ஆனால், தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். தோற்றத்திலும் பேச்சிலும் வசீகரம், இரண்டும் ஒரு சேர அமைவது அரிது. அரிதிலும் அரிதானவன் நீ. பாடும்போது பரலோகத்திற்கு ஏணி வைத்து அழைத்து சென்றது உன் குரல்.... மன்றாடும் போது இதயத்தை உருக வைத்தது உன...
Comments
Post a Comment