திங்கள் மாலை

.
🎨🎨🎨🎨🎨🎨

ஒவ்வோர் திங்களின் மாலையும்
ஓர் மதிப்பீட்டு நேரம்.
நன்றாய் சென்றதா இந்நாள்
என்பதை உணரும் மாலை.

செவ்வாயிலாவது
செம்மை பழகு என
சீர் தூக்கும் மாலை.
முடிக்காமல் விட்ட வேலை,
அவசர அவசரமாய்
முடித்த வேலை.

அழைக்க மறந்த
தொலையழைப்பு,
அவசரப்பட்டு
அழைத்த அழைப்பு.
யோசிக்காமல்
போட்ட ஸ்மைலி,
ஓவர் எக்ஸைட்டட் கமன்ட்ஸ்.

காதில் விழுந்தாலும்
கேட்காதது போல
தாமதம் செய்த டிஜிட்டல் டிலே.

காரணமின்றி வந்த வெறுப்பு.
கடுகடுத்த சொற்கள்.
காரணமின்றி சிந்திய கண்ணீர்.
எகத்தாளமாக சுழித்த அலட்சிய உதடு.
நானே உலகமென நினைத்த மதர்ப்பு.
மன்னிக்க மறந்த ஞாபகங்கள்.

ஒவ்வொரு திங்கள் மாலையும்
ஒரு தவ வனம்!
வார மீதி நாட்களுக்கான
வரப்பிரசாதம்!

A Gladys Stephen evening thoughts !

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.