பக்ரீத் காலை.
☪️☪️☪️☪️☪️
வரலாற்றின் படி இது
இப்ராஹிமின் தியாகம்.
இறைவனுக்காய் எதையும்
தரத்துணிந்த வேகம்.
இறையியல் விவேகம்.
ஆயிரமாயிரம் ஆண்டுகள்
தாண்டியும் பேசலாகும் பண்டிகைச்சம்பவம்.
அப்பாடா இன்றைக்கு
லீவென அக்கடாவென
துக்கடா மனசு துடிக்கின்றது.
ஆயினும்...பண்டிகைக்காலையில் வாழ்த்தோடு நின்றுவிடாமல் பண்டிகைக்காலையை
பொருள் பொதிந்து வாழ்த்துவோம்.
ஒரு தகப்பனின் தியாகம்.
ஒரு மார்க்கத்தின்
மக்களின் இறைப்பணிவு நிலை.
இறைவனே மிகப் பெரியவன்
எனும் சமர்ப்பணம்,
ஒரே மகனை பலிக்குப் படைத்த பக்ரீத்.
இஸ்லாமிய இதயங்களோடும்,
ஈன்ற தாயுள்ளத்தோடும்,
வலிகளின் நடுவே வாழ்ந்த
வரலாற்றை கொண்டாடுகின்றேன்.
இதயங்கள் இறைக்களமாகட்டும்,
உணர்வுகள் உறுதியாகட்டும்,
அன்புடன் அனைத்து
உயர்குணங்களும் கொண்டு
அகிலத்தில் நாமுள்ளவரை,
மதங்கள் புரிந்து,
மதயானை மதம் தவிர்த்து,
மனிதமாய், நேயமாய்
பரஸ்பர புரிதலில் எல்லோரும் இன்புற்றிருக்க விழைவோம் !
தியாகத் திருநாள் வாழ்த்துக்களில் Gladys Stephen Festival Morning Wishes!
Comments
Post a Comment