நானாக...


💅💅💅💅

நானாக நானாக,
எனக்கான என் காலை.
வானோடு சதிராடும்
வெளியாக பொன் காலை.
தானாக  வந்தாடும்
ஒளி முகமாய் வெண் காலை.

விழி அகல, இமையுயர
நான் பார்க்கும் புதுக்காலை.
ஒளி பரவ, உடலெழும்ப,
நான் ரசிக்கும் இது காலை.
பனி விலக, புவி மலர,
நான் விரும்பும் புதுக்காலை.

எழுந்தேன் இனியெனக்கு
கடமைகள் ஏராளம்.
தொடர்ந்தேன் பணியெனக்கு
உளதுகள், உளதுகள் தாராளம்.

நானாக, நானாக
காலைகள் ஆரம்பம்.
நாமாக நாம் வாழும்
பயணங்கள் ஆரம்பம்!

Start the music🎶🎵🎶
Enjoy the day.

A Gladys Stephen morning smile!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.